துக்ளக், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுடன் மோடியை ஒப்பிட்டு பாஜக சுப்பிரமணியன் சுவாமி மீண்டும் தாக்கு!
டெல்லி: முகம்மது பின் துக்ளக் மற்றும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடியை ஒப்பிட்டு பாஜகவை சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி மீண்டும் கடுமையாக விமர்சித்துள்ளார். பாஜகவில் இருந்தாலும் மோடி- அமித்ஷாவை கடுமையாக தாக்கி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார் சுப்பிரமணியன் சுவாமி.
ஜனதா கட்சியை நடத்தி வந்த சுப்பிரமணியன் சுவாமி பாஜகவில் அக்கட்சியை இணைத்தார். பாஜகவில் இணைந்தது முதலே அக்கட்சியிலும் பாஜக ஆட்சியிலும் முக்கிய பதவிகளை ஆவலுடன் எதிர்பார்த்தும் காத்திருந்தார் சுப்பிரமணியன் சுவாமி. ஆனால் பாஜக மேலிடமோ சுப்பிரமணியன் சுவாமியை பொருட்டாகவே மதிக்க கூடாது என்பதை கொள்கையாகவே வைத்திருக்கிறது போல.

மறைந்த நிதி அமைச்சர் அருண்ஜேட்லி தொடங்கி சுப்பிரமணியன் சுவாமியால் சீண்டப்படாத பாஜக தலைவர்களே இல்லை என்பதுதான் நிதர்சனம். அதேபோல மத்திய நிதி அமைச்சர் பதவி உள்ளிட்டவைகளுக்கும் சுப்பிரமணியன் சுவாமி இலக்கு வைத்துப் பார்த்தார். ஆனாலும் எதுவும் நடக்கவில்லை. அதிகபட்சமாக அவருக்கு ராஜ்யசபா எம்பி பதவி கிடைத்தது.
ஒருகட்டத்தில் பாஜகவில் இருந்து கொண்டே மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியுடன் நட்பு பாராட்டினார். இதனால் பாஜகவை விட்டு திரிணாமுல் காங்கிரஸில் சுப்பிரமணியன் சுவாமி இணைவார் எனவும் கூறப்பட்டது. லோக்சபா தேர்தல் முடிவுகள் வந்த போது கூட சுப்பிரமணியன் சுவாமி இவ்வளவு கடுமையான பதிவுகளை வெளியிட்டது இல்லை.
கடந்த சில நாட்களாக பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா ஆகியோரை கடுமையாக விமர்சித்து வருகிறார் சுப்பிரமணியன் சுவாமி. எமர்ஜென்சி குறித்த பதிவில், அவசர நிலை பிரகடனத்துக்கு எதிராக மோடியும் அமித்ஷாவும் என்னதான் செய்தார்கள்? என கேள்வி எழுப்பி இருந்தார்.
7 மாநிலங்களின் 13 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தல்களில் பாஜக பெரும் தோல்வியை சந்தித்தது குறித்த பதிவில், பாஜகவில் இருக்கும் நாம் நமது கட்சி டைட்டானிக் கப்பல் போல மூழ்குவதைப் பார்க்க வேண்டுமானால் பிரதமர் மோடியின் தலைமைதான் சிறப்புக்குரியதாக இருக்கும். 13 தொகுதி இடைத்தேர்தல் முடிவுகளானவை, பாஜக நிரந்தரமாக மூழ்கப் போவதற்கான முன் விரிசல்களை வெளிப்படுத்தி இருக்கிறது என விமர்சித்திருந்தார்.
இதன் தொடர்ச்சியாக இன்று, முகம்மது பின் துக்ளக்- பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் அவர்களது கட்டிடங்களால்தான் நினைவில் இருக்கின்றனர். அதேபோல மோடியும் அடிக்கல் நாட்டிய கட்டிடங்களின் பெயரால் நினைவில் இருப்பார். அதேபோல லடாக்கில் சீனாவிடம் சரணடைந்ததற்காகவும் மோடி நினைவில் கொள்ளப்படுவார் எனவும் காட்டமாக விமர்சித்துள்ளார் சுப்பிரமணியன் சுவாமி.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications