400? 210? 272? லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு எத்தனை இடம் கிடைக்கும்? பெரும்பான்மை பெறுவது சாத்தியமா?
டெல்லி: லோக்சபா தேர்தல் இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது. ஜூன் 4-ந் தேதி லோக்சபா தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தற்போதைய அரசியல் களத்தில் பாஜகவால் மீண்டும் ஆட்சி அமைக்க முடியுமா? பெரும்பான்மைக்கான இடங்களை பாஜக தனித்துப் பெறுமா? என விவாதிக்கபட்டு வருகிறது.
2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜக 303 இடங்களில் வென்றது. தற்போதைய தேர்தலில் 400 இடங்களைக் கைப்பற்றுவோம் என்கின்றனர் பாஜக தலைவர்கள். மொத்தம் 543 தொகுதிகளில் பாஜக கூட்டணியால் 400 இடங்களைக் கைப்பற்ற முடியுமா? சாத்தியம் இருக்கிறதா? தென்னிந்தியாவின் 132 தொகுதிகளை கணக்கில் எடுத்துக் கொண்டு பார்த்தால் சாத்தியம் குறைவுதான். தமிழ்நாடு, கேரளாவில் பாஜக ஒன்றிரண்டு தொகுதிகளில்தான் வெல்ல முடியும். ஆந்திரா, தெலுங்கானாவிலும் ஏறத்தாழ இதே நிலைமைதான். கர்நாடகாவில் மட்டும்தான் டபுள் டிஜிட் இடங்களைப் பாஜக பெற முடியும். ஆகையால் தென்னிந்திய மாநிலங்களில் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே பாஜகவால் 400-க்கும் அதிகமான தொகுதிகளைக் கைப்பற்ற முடியும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

சரி பாஜகவுக்கு எத்தனை இடம்தான் கிடைக்கும்? 2019 தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் பாஜக 30 தொகுதிகளை இழந்தால் பெரும்பான்மைக்கான 272 இடங்களைக் கைப்பற்ற போராட வேண்டியதிருக்கும். அதேநேரத்தில் பாஜகவின் கூட்டணி கட்சிகள் 30, 40 தொகுதிகளில் வென்றாலே மீண்டும் பாஜகதான் ஆட்சி அமைக்கும் நிலைமை உருவாகும்.
பாஜகவுக்கு 240 முதல் 260 இடங்கள் கிடைக்கக் கூடும் என்கிறார் தேர்தல் வியூக வல்லுநர் யோகேந்திர யாதவ். இதனை மற்றொரு தேர்தல் வியூக வல்லுநராக பிரசாந்த் கிஷோரும் ஆமோதிப்பதைப் போல எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
யோகேந்திர யாதவின் கணிப்பின் படி காங்கிரஸ் கட்சி 100 இடங்களையும் இந்தியா கூட்டணியில் உள்ள இதர கட்சிகள் 100 இடங்களைப் பெறுவதாக சூழ்நிலை ஏற்பட்டாலும் பெரும்பான்மையை இந்தியா கூட்டணியால் பெற்றுவிட முடியுமா? என்பது கேள்விக்குறிதான்.
2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜக சுமார் 1 லட்சத்துக்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வென்ற தொகுதிகள் 77. இதில் 40 தொகுதிகளில் சொற்ப எண்ணிக்கையில்தான் பாஜக வெல்லவும் முடிந்ததது. இந்த 40 தொகுதிகளை பாஜக மீண்டும் கைப்பற்றுமா? என்பதை உறுதியாக சொல்லவும் இயலாது. பாஜக ஆட்சி அமைப்பதில் இந்த 77 தொகுதிகள் மிக முக்கிய பங்கை வகிக்கக் கூடும் எனவும் தேர்தல் வியூக வகுப்பாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்த 77 தொகுதிகள் பாஜகவை விட்டு போனால் 210 முதல் 230 இடங்களைப் பெறக் கூடிய நிலைமைதான் உருவாகும். அப்போது பாஜகவின் கூட்டணி கட்சிகள் கை கொடுக்கும் அல்லது இந்தியா கூட்டணி உடைக்கப்பட்டு புதிய ஆட்சியை பாஜக அமைக்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications