உ.பி.யில் பாஜக 108 தொகுதிகளை இழக்கும்! பஞ்சாப்பில் பூஜ்யம்! பரபர சி-வோட்டர் சர்வே
டெல்லி: அடுத்த ஆண்டு தொடக்கத்தில், உத்தர பிரதேசம் உட்பட, ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவிருக்கும் நிலையில், ஏபிபி-CVoter இணைந்து நடத்தியுள்ள தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன.
பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு, கோவா தவிர்த்த 4 மாநிலங்களிலும் வெற்றி அவ்வளவு எளிதாக கிடைத்து விடாது என்பதை இந்த கருத்துக் கணிப்பு முடிவு காட்டுகிறது.
உத்தரப் பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று சர்வே கூறினாலும் கூட, கடந்த தேர்தலில் அக்கட்சி வென்ற தொகுதிகளில் 100க்கும் மேலே இழக்க நேரிடும் என்று இந்த சர்வே தெரிவிக்கிறது.

கருத்துக் கணிப்பு முடிவுகள்
பஞ்சாபில், பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகள் ஒரு இடத்திலும் கூட வெல்ல முடியாது என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதேசமயம் ஆம் ஆத்மி கட்சி (AAP) மற்றும் காங்கிரஸ் இரண்டுக்கும் இடையே அங்கு கடும் போட்டி இருக்கிறதாம். இரு கட்சிகளில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பு இல்லை என்று கூறுகிறது இந்த கருத்து கணிப்பு. மொத்தம் 690 தொகுதிகளில், 1,07,193 நபர்களிடம் இந்த கருத்துக்கணிப்பு பிரமாண்டமாக நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உத்தரப்பிரதேசம்
உத்தரப் பிரதேசத்திற்கான கணிப்பு படி, பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் சுமார் 108 இடங்களை இழக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2017ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி 325 தொகுதிகளை வென்றது. இம்முறை பாஜக கூட்டணி 217 இடங்களில் வெல்ல வாய்ப்பு உள்ளதாம். உ.பி.யில் மொத்த தொகுதிகள் எண்ணிக்கை 403. பெரும்பான்மைக்கு 202 தொகுதிகளை வென்றால் போதும். எனவே பாஜக மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வாய்ப்பு இருப்பதாக இந்த கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

அகிலேஷ் யாதவ் கட்சி
உத்தர பிரதேசத்தில், அகிலேஷ் யாதவின், சமாஜ்வாதி கட்சி 156 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி 18 இடங்களிலும், காங்கிரஸ் 8 இடங்களிலும் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. பாஜக கூட்டணி 40.7 சதவீத வாக்குகளையும், சமாஜ்வாதி கூட்டணி 31.1 சதவீதமும், பகுஜன் சமாஜ் கட்சி 15.1 சதவீதமும், காங்கிரஸ் 8.9 சதவீத வாக்குகளையும் பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. பாஜக மற்றும் சமாஜ்வாதி கட்சிகளுக்கு இடையேதான் உ.பி.யில் நேரடி, மோதல் இருக்கப் போகிறது.

பஞ்சாப்
பஞ்சாபில், ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸுக்கு இடையே நேரடி போட்டி இருக்கப் போகிறது. பஞ்சாப் மாநிலத்தில் பாஜக ஒரு இடத்திலும் வெற்றி பெறாது என்று கணிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் 46 இடங்களையும், ஷிரோன்மணி அகாலிதளம் 20 இடங்களையும், ஆம் ஆத்மி 51 தொகுதிகளையும் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் 34.9 சதவீத வாக்குகளையும், ஷிரோன்மணி அகாலிதளம் 20.6 சதவீத வாக்குகளையும், ஆம் ஆத்மி 36.5 சதவீத வாக்குகளையும், பாஜக 2.2 சதவீத வாக்குகளையும் பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.

உத்தரகாண்ட்
உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக வெற்றிபெறக்கூடும் என்று கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. பாஜக 38 இடங்களையும், காங்கிரஸ் 32 இடங்களையும், ஆம் ஆத்மி மற்றும் பிற கட்சிகள் எதிலும் வெல்ல வாய்ப்பு இல்லை என்றும் கணிக்கப்பட்டுள்ளது. பாஜக 41.4 சதவீத வாக்குகளையும், காங்கிரஸ் 36.3 சதவீத வாக்குகளையும், ஆம் ஆத்மி 11.8 சதவீத வாக்குகளையும் பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.

கோவா
CVoter சர்வே முடிவுகளின்படி, கோவா மாநிலம் பாஜக கைக்கு செல்ல உள்ளது. பாஜக 21 இடங்களைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆம் ஆத்மி 5 மற்றும் காங்கிரஸ் 4 தொகுதிகளைப் பெற வாய்ப்பு உள்ளதாம். பாஜக 35.7 சதவிகிதம், ஆம் ஆத்மி 23.6 சதவிகிதம் மற்றும் காங்கிரஸ் 18.6 சதவிகிதம் வாக்குகளைப் பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கோவாவில் 2017 சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 17 இடங்களில் வெற்றி பெற்றது நினைவிருக்கலாம்.

மணிப்பூர்
மணிப்பூரில், பாஜக ஆட்சியமைக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் காங்கிரஸ் நல்ல போட்டியை கொடுக்கும். 60 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் பாஜக 25-29 இடங்களிலும், காங்கிரஸ் 20-24 இடங்களிலும், நாகா மக்கள் முன்னணி (என்பிஎஃப்) 4-8 இடங்களிலும், மற்றவை 3-7 இடங்களிலும் வெற்றிபெற வாய்ப்புள்ளதாக சர்வே தெரிவிக்கிறது. வாக்கு சதவீதம் அடிப்படையில், பாஜக 38.7 சதவீத வாக்குகளைப் பெறும் என்றும், காங்கிரஸ் 33.1 சதவீத வாக்குகளைப் பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications