தலைநகரை தட்டித் தூக்கிய பாஜக.. டெல்லி முதல்வர் அரியணையில் அமர போவது யார்? சஸ்பென்ஸ்க்கு இன்று விடை!
டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றி பெற்ற பாஜக தலைநகரில் ஆட்சி அமைக்க உள்ளது. இந்த நிலையில் இன்று டெல்லியில் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ள சூழலில், முதலமைச்சர் யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது.
இந்தியாவின் தலைநகரான டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் இருந்த நிலையில், பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி சட்டமன்ற தேர்தல் வாக்குப் பதிவும், 8ஆம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிந்திருக்கிறது.

மொத்தமுள்ள 70 சட்டமன்ற தொகுதிகளில் 36 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்றால் ஆட்சியைப் பிடிக்கலாம் என்ற நிலையில் பாஜக 48 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆம் ஆத்மி ஏறக்குறைய 20 தொகுதிகளில் கடும் போட்டி அளித்த நிலையில், 22 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட முன்னிலை வகிக்காத நிலையில், தற்போது பாஜக ஆட்சி அமைக்கவுள்ளது. தேர்தல் வாக்குப்பதிவு சதவீதத்தை பார்க்கும் போது வெறும் 3 சதவீத முன்னிலையில் பாஜக ஆட்சியைப் பிடித்தது. அதே நேரத்தில் இரண்டு முறை பெரும்பான்மையோடு ஆட்சியைப் பிடித்த ஆம் ஆத்மி தற்போது எதிர்க் கட்சி வரிசையில் முதன்முறையாக அமர்ந்திருக்கிறது. தேசிய கட்சியான காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை.
ராகுல், பிரியங்கா காந்தியின் பிரச்சாரம் எடுபடாத நிலையில் தொடர்ந்து மூன்று முறை டெல்லி சட்டமன்றத் தேர்தலில் டக் அவுட் ஆகியிருக்கிறது காங்கிரஸ். இந்த தேர்தலில் ஆம் ஆத்மியை பொறுத்தவரை இது மிகப் பெரிய தோல்வி என்று தான் கூற வேண்டும். முதலமைச்சராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் படுதோல்வியை சந்தித்தனர். ஆறுதல் அளிக்கும் விதமாக அதிஷி மட்டுமே வெற்றி பெற்றார். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் இல்லாமல் அந்த கட்சி சட்டமன்றத்தில் பாஜகவை எதிர்கொள்ளப் போகிறது.
இது ஒருபுறம் இருக்க டெல்லியில் ஆட்சி கட்டிலில் அமர போகும் முதலமைச்சர் யார் என்ற கேள்வியும் எழுந்து இருக்கிறது. தற்போது பாஜக ஆட்சி அமைக்க உள்ள நிலையில் முதலமைச்சர் குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இதை அடுத்து இன்று புதிய முதலமைச்சரை தேர்வு செய்வது தொடர்பாக பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது. தற்போதைய சூழலில் பர்வேஷ் வர்மா, ரேகா குப்தா, விஜேந்தர் குப்தா டெல்லி முதலமைச்சர் பெயர்கள் அடிபடுகிறது.
இன்றைய கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் அறிவுரைப்படி புதிய முதலமைச்சர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். தொடர்ந்து டெல்லி துணைநிலை ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறது பாஜக. புதிய முதல்வர் பெயர் அறிவிக்கப்பட்டதும் நாளை பதவி ஏற்பு விழா நடைபெற இருக்கிறது. இதற்காக ராம்லீலா மைதானம் தயாராகி வருகிறது. இதை அடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
5000-க்கும் மேற்பட்ட போலீசார், 10 கம்பெனி துணை இராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். நாளை மாலை நான்கரை மணிக்கு பதவி ஏற்பு விழா நடைபெற இருக்கும் நிலையில் புதிய முதலமைச்சரும், அமைச்சர்களும் பதவியேற்க இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட அமைச்சர்கள், பாஜக தலைவர்கள், பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், பாஜக கூட்டணி முதல்வர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications