டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காசிப்பூர் எல்லை போராட்டத்தில் ஊடுருவிய நபருக்கு 'பளார்' விட்ட விவசாயிகள் சங்க தலைவர் ராகேஷ் திகாயத்

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லி காசிப்பூர் எல்லைப் பகுதியில் போராட்டத்துக்குள் ஊடுருவிய நபருக்கு விவசாயிகள் சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத் கன்னத்தில் ஓங்கி அறைவிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

60 நாட்களுக்கும் மேலாக அமைதியாக நடைபெற்று வந்தது டெல்லி விவசாயிகள் போராட்டம். இந்த போராட்டத்தை சீர்குலைக்கும் வகையில் விஷமிகள் குடியரசு தினத்தன்று ஊடுருவி போலீசாருடன் மோதினர்.

BKU leader Rakesh Tikait slaps man at Ghazipur protest site

இதனால் விவசாயிகள் போராட்டத்தில் இருந்து 4 அமைப்புகள் விலகின. இதனையே ஒரு சந்தர்ப்பமாக கருதி விவசாயிகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

விவசாயிகளை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தும் முயற்சி- ராகுல், பிரியங்கா, அகிலேஷ், தேஜஸ்வி சீற்றம்விவசாயிகளை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தும் முயற்சி- ராகுல், பிரியங்கா, அகிலேஷ், தேஜஸ்வி சீற்றம்

இந்த நிலையில் டெல்லி காசிப்பூர் எல்லையில் நடைபெற்று வரும் போராட்டத்தின் போது விவசாயிகள் சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத் செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஒருநபர் கையில் தடியுடன் கூட்டத்துக்குள் நுழைந்து பத்திரிகையாளர்களை அச்சுறுத்தி கொண்டிருந்தார்.

இதனைப் பார்த்து கொண்டிருந்த ராகேஷ் திகாயத் அந்த நபரை அழைத்து விசாரித்தார். அவர் குழப்பமான பதிலை சொன்னதால் அந்த இடத்திலேயே பளார் என கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டார். பின்னர், பாஜகவை சேர்ந்த இந்த நபர் குழப்பம் ஏற்படுத்த முயற்சித்தார். அவர் போலீசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார் என்றார் ராகேஷ் திகாயத்.

English summary
BKU Rakesh Tikait was caught on camera slapping a man at the Ghazipur protest site.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X