ஐஆர்சிடிசி செயலியில் நண்பர்களுக்கு டிக்கெட் புக் செய்தால் அபராதமா? ரயில்வே கொடுத்த விளக்கம்
டெல்லி: IRCTC கணக்கில் இருந்து நண்பருக்கோ அல்லது வேறு யாருக்கேனும் நீங்கள் டிக்கெட் முன்பதிவு செய்து கொடுத்தால், சிறை செல்ல வேண்டும் அல்லது ரூ.10,000 அபராதம் செலுத்த வேண்டும் எனவும் ரயில்வே நிரவாகம் விதியை கடுமையாக்கி இருப்பதாக ஒரு தகவல் பரவுகிறது. ஆனால், இந்த தகவல் உண்மையில்லை என்று ஐஆர் சிடிசி மறுத்துள்ளது. மேலும் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளது.
இந்தியாவில் ரயில் போக்குவரத்து என்பது மக்களிடையே தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. தொலை தூர பயணங்கள் தொடங்க்கி பக்கத்தில் இருக்கும் நகரங்களுக்கு செல்ல வேண்டும் என்றால் ரயில்கள் உள்ளது என்றால் முதலில் ரயிலில் செல்லவே விருப்ப படுவார்கள்.

ரயில் டிக்கெட் முன்பதிவு: டிக்கெட் செலவும் குறைவு, கழிப்பறை தொடங்கி பல்வேறு வசதிகளும் இருப்பதால் மக்கள் ரயில்களில் பயணிக்கவே விரும்புகிறார்கள். ரயில்களை பொறுத்தவரை 120 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. இதனால் பண்டிகை உள்ளிட்ட நாட்களை கொண்டாட சொந்த ஊருக்கு செல்லும் மக்கள் முன் கூட்டியே முன்பதிவு செய்து பயணித்து வருகிறார்கள்.
ஐஆர்சிடிசி இணையதளம்: முன்பெல்லாம் ரயிலில் முன்பதிவு செய்ய டிக்கெட் கவுன்டருக்கு சென்று கால் கடுக்க காத்து இருக்க வேண்டும். தற்போது ஐஆர்சிடிசி இணையதளம், செயலி வாயிலாக டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி வந்துவிட்டதால் பயணிகள் இருந்த இடத்தில் இருந்தே டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ள முடியும். ஆனால் ரயிலில் டிக்கெட் கிடைப்பது என்பது அவ்வளவு எளிதானது இல்லை.
வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் இந்த ரூட்டில் தான் ஓடப் போகுதாம்.. எப்போதில் இருந்து தெரியுமா?
நண்பர்கள் டிக்கெட் போட்டால்: தட்கல் டிக்கெட் போட்டவர்களிடம் போய் கேட்டால் இது பற்றி பக்கம் பக்கமாக சொல்வார்கள். டிக்கெட் கிடைப்பதற்குள் கடும் பாடு பட வேண்டியிருக்கும் என்பதால், பலரும் தங்கள் நண்பர்களிடம் சொல்லி அவர்களை டிக்கெட் போட வைப்பது வாடிக்கையாக உள்ளது. இந்த நிலையில், தான், கடந்த சில தினங்களுக்கு முன்பாக சமூக வலைத்தளங்க்களில் ஒரு தகவல் பரவியது.
ஐஆர்சிடிசி விளக்கம்: அதில், IRCTC கணக்கில் இருந்து நண்பருக்கோ அல்லது வேறு யாருக்கேனும் நீங்கள் டிக்கெட் முன்பதிவு செய்து கொடுத்தால் சிறை செல்ல வேண்டும் அல்லது ரூ.10,000 அபராதம் செலுத்த வேண்டும் எனவும் ரயில்வே நிரவாகம் விதியை கடுமையாக்கி இருப்பதாகவும் சொல்லப்பட்டது. ஆனால், தற்போது இந்த தகவலை ஐஆர் சிடிசி மறுத்துள்ளது. இது தொடர்பாக ஐஆர் சி டிசி தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-
போலியான தகவல்: வேறுபட்ட துணை பெயர்களில் டிக்கெட் புக்கிங்க் செய்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருப்பதாக பரவும் தகவல் போலியானது. தனிப்பட்ட யூசர் ஐடியில் ஒருவர் தனது நண்பர்களுக்கோ, உறவினர்களுக்கோ டிக்கெட் முன் பதிவு செய்ய முடியும். ஒரு மாததத்தில் 12 டிக்கெட்டுகள் வரை ஒரு பயனர் புக்கிங்க் செய்து கொள்ளலாம்.
ஆதார் பதிவுடன் இருந்தால் 24 டிக்கெட்டுகள் வரை புக் செய்ய முடியும். தனிப்பட்ட பெர்சனல் ஐடியில் புக் செய்யும் டிக்கெடுகளை வணிக நோக்கத்துடன் பயன்படுத்த கூடாது. இத்தகைய செயலில் ஈடுபடுவது ரயில்வே சட்டம் 1989 பிரிவு 143 கீழ் குற்றமாகும் என்று தெரிவித்துள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications