பிரிக்ஸ் உச்சி மாநாடு ..தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி .. சீன அதிபரை சந்திப்பாரா?
டெல்லி: தென்ஆப்பிரிக்காவில் பிரிக்ஸ் உச்சி மாநாடு இன்று தொடங்கும் நிலையில், அதில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை தென்ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றார்.
பிரிக்ஸ் அமைப்பு என்பது பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளை உள்ளடக்கியதாகும். இந்த நாடுகளின் கூட்டமைப்பின் 15-வது உச்சி மாநாடு தென்ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் இன்று (ஆக.22) தொடங்குகிறது. 2019ம் ஆண்டுக்கு பிறகு நேரடியாக நடைபெறும் பிரிக்ஸ் மாநாடு ஆகும்.

கடந்த சில ஆண்டுகளாக கொரோனா காரணமாக காணொலி காட்சி மூலம் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி இந்த ஆண்டு நேரடியாக பங்கேற்கிறார். இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு தென்ஆப்பிரிக்க அதிபர் சிறில் ரமாபோசா அழைப்பு விடுத்தன் பேரில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
இதற்காக பிரதமர் மோடி இன்று காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் தென்ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றார். இந்த மாநாட்டில் உறுப்பு நாடுகளின் தலைவர்களான சீன அதிபர் ஜின்பிங், பிரேசில் அதிபர் உள்ளிட்டோரும் பங்கேற்கிறார்கள். இதுதவிர பல்வேறு ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் வங்காளதேசம், இந்தோனேஷியா உள்ளிட்ட ஆசிய நாடுகளின் தலைவர்களும் இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்க உள்ளார்கள்.

ஆகஸ்ட் 22ம் தேதியான இன்று தொடங்கி வரும் ஆகஸ்ட் 24-ந்தேதி வரை 3 நாட்கள் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெறுகிறது.இந்த மாநாட்டில்
குறிப்பாக உறுப்பு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் மற்றும் பொது கரன்சி உள்ளிட்டவை குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பிரிக்ஸ் அமைப்பில் மேலும் சில நாடுகளை சேர்த்து விரிவுபடுத்துவது குறித்தும் விவாதிக்கப்படுகிறது. இந்த அமைப்பில் இணைவதற்காக சுமார் 23 நாடுகள் விண்ணப்பித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரிக்ஸ் மாநாட்டை தொடர்ந்து பிரிக்ஸ் அமைப்பில் உறுப்பினர் அல்லாத நாடுகளின் தலைவர்களும் பங்கேற்கும் 'பிரிக்ஸ் - ஆப்பிரிக்கா அவுட்ரீச் மற்றும் பிரிக்ஸ் பிளஸ் உரையாடல்' நிகழ்ச்சியிலும் பிரதமர் மோடி கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி, பல்வேறு நாடுகளின் தலைவர்களை நேரில் சந்தித்து பேசுவார் எனறு கூறப்படுகிறது. அதேநேரம சீன அதிபர் ஜின்பிங்குடன் நேரடி சந்திப்பு நடைபெறுமா? என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் இல்லை. அதேநேரம் இருவரும் சந்தித்து கொள்ள அதிக வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது

பிரிக்ஸ் உச்சி மாநாட்டை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி 25-ந்தேதி கிரீஸ் நாட்டுக்கு செல்ல உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிசை சந்தித்து இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசிப்பார் என்றும் அங்கு வாழும் இந்தியர்களுடனும் கலந்துரையாடல் நடத்துவார் என்றும் வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது. கிரீஸ் நாட்டுக்கு இந்திய பிரதமர் ஒருவர் செல்வது கடந்த 40 ஆண்டுகளில் இதுவே முதல் முறை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications