ஐயோ என்னை விட்டுடுங்க.. திருமணமானதும் கதறிய மணப்பெண்.. குண்டுக்கட்டாக தூக்கி காரில் போட்ட உறவினர்கள்
டெல்லி: திருமணமான பெண் ஒருவர் மாப்பிள்ளையுடன் செல்ல மறுத்து சிறு குழந்தையை போல் அடம்பிடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
திருமணமாகினால் பெண் என்பவர் தனது பிறந்த வீட்டை விட்டுவிட்டு புகுந்த வீட்டிற்கு செல்ல வேண்டும். இத்தனை நாட்கள் வாழ்ந்த சூழலிலிருந்து திருமணம் ஆன நாள் முதல் அந்த பெண்ணின் சூழல் மாறுபடுகிறது.
இதனால் திருமணத்தின் போது பெண்கள் தங்களுக்கு பெற்றோர், உடன் பிறந்தவர்கள், பிரியமான குடும்ப உறுப்பினர்களை கட்டி பிடித்து அழும் காட்சிகள் பெரும்பாலான திருமணங்களில் பார்த்திருப்போம். இந்த செய்தியை அறியும் நாமும் இது போன்ற சூழலை கடந்து தான் வந்திருப்போம்.

திருமண வீடு
திருமண வீடு என்றாலே இரு வீட்டாரும் கொண்டாட்டங்களில் இருப்பர். திருமணத்தின் சாராம்சமே அடுத்த தலைமுறைக்கு விதைப்பது என்பதால் மணமக்களின் உற்றார் உறவினர் எல்லாம் மகிழ்ச்சி பொங்க இருப்பார்கள். திருமணம் என்றாலே சிறு சிறு பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். பத்திரிகைகளில் பெயர் போடாதது, விருந்தில் ஏதாவது குறை கண்டுபிடிப்பது என இருப்பார்கள்.

சண்டை சச்சரவுகள்
இந்த சண்டை சச்சரவுகள் பனி போல் சிறிது நேரத்திலேயே விலகிவிடும். இப்படி அனைவரும் கொண்டாட்டத்தில் இருக்க ஒரு குறிப்பிட்ட சிலர் மட்டும் மகிழ்ச்சி கலந்த சோகத்தில் இருப்பர். அவர்கள் மணப்பெண், அவரது பெற்றோர், உடன் பிறந்தவர்கள், மிகவும் பாசக்கார சொந்தங்கள் ஆவர். இத்தனை ஆண்டுகள் நம்முடன் இருந்து விட்டு பெண் நம்மை விட்டு பிரிந்து கணவன் வீட்டுக்கு செல்கிறாரே!

பிரச்சினை
அங்கு அவருக்கு எந்த பிரச்சினையும் இல்லாமல் சந்தோஷமாக இருக்க வேண்டும். எல்லாருடனும் அனுசரணையாக இருத்தல் வேண்டும். நம் பெண்ணை மாப்பிள்ளை கண்கலங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நாம் தேர்வு செய்த மாப்பிள்ளையும் அவரது குடும்பத்தினரும் நல்லவர்களாக இருத்தல் வேண்டும். இப்படியாக பல சோகங்கள் தாலி கட்ட நேரம் நெருங்க நெருங்க அவர்களை தொற்றிக் கொள்ளும்.

திருமணம்
திருமணமானவுடன் முதலில் மணமகனின் வீட்டுக்கு செல்ல வேண்டும். அப்போதே மணப்பெண்ணுக்கு துக்கம் தொண்டையை தொட்டுவிடும். போயிட்டு வரேன்ப்பா என சொல்லும் போதே தந்தையின் கண்களிலும், தாயின் கண்களிலும் , உடன்பிறந்தவர்கள் கண்களிலும் குளம் போல் நீர் தேங்கும். பின்னர் மணப்பெண்ணை மாப்பிள்ளையும் மணப்பெண்ணின் பெற்றோரை அவர்களுடைய உறவினர்களும் சமாதானம் செய்வர்.

அடம் பிடித்த காட்சிகள்
இப்படியாக சில நாட்களுக்கு இருக்கும். பிறகு பெற்றோர் அழைத்தால் கூட கணவரை விட்டுவிட்டு வரமாட்டேன் எனும் சொல்லும் நிலையும் நடக்கும். ஆனால் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் மணப்பெண் மாப்பிள்ளையின் வீட்டுக்கு செல்ல மாட்டேன் என அடம்பிடிக்கும் காட்சிகள் அடங்கியுள்ளது.

விருந்தோம்பல்
திருமணம் நடந்தது, விருந்தோம்பலும் நடந்து முடிந்தது, இதையடுத்து மண்டபத்தைவிட்டு அவர்கள் கிளம்ப முற்பட்ட போது மாப்பிள்ளையுடன் போக மாட்டேன் என மணப்பெண் அழுது அடம்பிடித்துவிட்டார். பின்னர் மாப்பிள்ளையுடன் செல்லவே மாட்டேன் என அழுது புரண்டார், பின்னர் அவரை அப்படியே குண்டுக்கட்டாக மணப்பெண் வீட்டார் காரில் ஏற்றி மாப்பிள்ளையுடன் அனுப்பி வைத்தனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications