"மனதில் நின்ற காதலியே மனைவியாக வரும்போது.." ட்விஸ்ட் வைத்த மணமகன்.. ஸ்தம்பித்து நின்ற மணமகள்!
டெல்லி: திருமணத்திற்கு முன்னர் மாலையிடுவதற்கு மணமகன் மணமகளிடம் முத்தத்தை கேட்ட வீடியோ வைரலாகி வருகிறது. கடைசியில் இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொள்வதும் காதலிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க மணமகன் முத்தம் கேட்டதும் தெரியவந்தது.
Recommended Video
பழங்காலங்களில் திருமணங்கள் சண்டை சச்சரவு கண்ணீருடன் முடியும் என்பார்கள். ஆனால் இந்த காலத்தில் இளம் தலைமுறையினர் வரதட்சிணைக்காக எந்த சண்டையையும் போடாமல் விட்டு கொடுத்து போவதால் திருமணங்கள் சுமுகமாகின்றன.
இந்த சுமூகம் ஒரு சிலருக்கு திருமணத்திற்கு பிறகு பிரச்சினைகளை கொடுக்கும். ஒரு சிலருக்கு திருமணத்திற்கு பிறகும் ஸ்மூத்தாக செல்லும். வடமாநிலங்களில் மூன்று நாட்கள் மெஹந்தி விழா, மாப்பிள்ளை ஊர்வலம் என பல சடங்குகள் நடத்தப்படுகின்றன.

வழக்கம்
இந்த திருமணங்களில் அவரவர் வழக்கப்படி விளையாட்டுகளும் நிறைந்திருக்கும். அந்த வகையில் ஒரு திருமணத்தில் மணமகன் ஒருவர் செய்த சேட்டை வீடியோ வைரலாகி வருகிறது. வடமாநிலத்தவரின் திருமணம் ஒன்றில் மணமகன் மற்றும் மணமகள் ஆகிய இருவரும் மாலை மாற்றி கொள்ளும் சடங்கு நடைபெறுகிறது.

அணிவிக்காத மணமகன்
இந்த சடங்கின் போது அந்த மணமகள் மணமகனுக்கு மாலையை அணிவிக்கிறார். இதையடுத்து மணமகனிடம் இருந்து மாலையை பெற்று கொள்ள மணமகள் முற்படும் போது திடீரென மணமகன் மாலையை அணிவிக்க மாட்டேன் என்கிறார். இது புரியாமல் மணமகள் சில நொடிகள் விழிக்க, உடனே முத்தம் கொடுத்தால் மாலை அணிவிக்கிறேன் என்கிறார்.

வெட்கம்
இதனால் மணப்பெண் வெட்கத்தில் தலை குனிய , கன்னங்கள் சிவக்கின்றன. அங்கிருக்கும் சொந்தபந்தங்கள் எல்லாம் ஆரவாரம் செய்கிறார்கள். உடனே அந்த பெண்ணும் மணமகனின் கன்னத்தில் முத்தமிடுகிறார். பின்னர் மாலையை பெற்றுக் கொள்கிறார்.

மணமகள்
அந்த மணமகன் பெயர் அபிஷேக் சர்மா, மணமகள் பெயர் அன்மோல் ஷெராவத். இருவரும் கல்லூரியில் ஒன்றாக படித்தவர்களாம். பின்னர் அவர்களுக்குள் காதலாகி திருமணம் வரை சென்றுள்ளார். எனவே தனது காதலிக்கு ஒரு ட்விஸ்ட் தர மணமகன் இது போல் மாலை அணிவிக்க மாட்டேன் என சொல்லிவிட்டு பின்னர் முத்தம் கேட்டுள்ளார். இந்த காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது?












Click it and Unblock the Notifications