நடு நடுங்கிய டெல்லி.. சுப்ரீம் கோர்ட் பெண் வக்கீல் கொலை.. போலீசிடம் தப்பிக்க கணவர் செய்த செயல்..ஷாக்
டெல்லி: டெல்லியில் உச்ச நீதிமன்ற பெண் வழக்கறிஞரை அவரது கணவரே கொலை செய்து உடலை பாத்ரூமில் வைத்து விட்டு தானும் வீட்டிற்குள்ளே மறைந்து இருந்த திடுக்கிட வைக்கும் கொடூர கொலை சம்பவம் நடைபெற்றுள்ளது.
டெல்லியில் உள்ள உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்தவர் ரேனு ஷின்கா (வயது 61). தனது கணவருடன் நொய்டாவில் உள்ள ஒரு பிளாட்டில் வசித்து வந்தார். ரேனு ஷின்காவின் கணவரும் இந்திய வருவாய் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரி ஆவார். நல்ல வருமானம் கவுரமான வாழ்க்கை என வாழ்ந்து கொண்டிருந்த இந்த தம்பதிக்குள் மனக்கசப்பு ஏற்பட்டதாக தெரிகிறது.

இதனால் மனைவி என்று கூட பாராமல் அஜய் நாத், ரேனு சின்காவை கொலை செய்து வீட்டின் பாத்ரூமிலேயே உடலை மறைத்து வைத்துள்ளார். வழக்கம் போல் ரேனு சின்காவின் சகோதரர் அவருக்கு போன் செய்துள்ளார். ஆனால், அவர் போனை எடுக்கவில்லை என்பதால் சந்தேகம் அடைந்த ரேனு சின்காவின் சகோதரர் போலீசிடம் புகார் அளித்தார். இதன் பேரில் போலீசார் அங்கு சென்று விசாரித்த போதுதான் இந்த கொலை சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
வீட்டிற்கு சென்ற போலீசார் வீட்டின் கதவு பூட்டியிருந்ததால் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு வீட்டின் பாத்ரூமில் ரேனுவின் உடல் கிடந்தது. வீட்டில் போலீசார் தொடர்ந்து சோதனை நடத்திய போது அவரது கணவரை காணவில்லை. இதனால், போலீசாரின் சந்தேகம் அவர் பக்கம் திரும்பியது. ரேனுவின் சகோதரும் தனது சகோதரிக்கும் அவரது கணவரான அஜய் நாத்திற்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்ததாகவும் கூறினார்.
இதனால், அவரது செல்போன் எண்ணை போலீசார் தொடர்பு கொண்ட போது ஸ்விட்ச் ஆப் ஆகியிருந்தது. தொடர்ந்து வீடு முழுக்க தேடிய போது வீட்டின் ஸ்டோர் ரூமில் மறைந்து இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரை கைது செய்து போலீசார் நடத்திய விசாரணையில் மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். மேலும், தனது பங்களாவை ரூ.4 கோடிக்கு விற்க முடிவு செய்து அதற்காக அட்வான்சும் வாங்கி விட்டதாகவும்.
ஆனால் மனைவி வீட்டை விற்க எதிர்ப்பு தெரிவித்ததால் இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டதாகவும் போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது. அதிகப்படியான ரத்த இழப்பு ஏற்பட்டு ரேணு உயிரிழந்துள்ளார். பிரேத பரிசோதனைக்கு பிறகே அவரது மரணத்திற்கான காரணம் உறுதி செய்ய முடியும் என்று போலீசார் தெரிவித்தனர். குற்றம் நடைபெற்ற இடத்தில் இருந்து போலீசார் ஆவணங்களை சேகரித்துள்ளனர். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications