வருமான வரி விகிதத்தில் பெரும் மாற்றம்.. ஆனால் ஒரு கன்டிஷன்.. பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு!
Recommended Video
டெல்லி: 2020 பட்ஜெட் அறிவிப்பில் தனி நபர் வருமான வரி சலுகைகள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இனி ஆண்டுக்கு, 5 லட்சம் முதல் 7.5 லட்சம் வரையிலான வருவாய் ஈட்டுவோர் இனி 10 சதவீதம் வருமான வரி செலுத்தினால் போதும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த சலுகை விருப்ப தேர்வு என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய நாடாளுமன்றத்தில் நடப்பு நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இரண்டாவது முறையாக இன்று இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இந்த பட்ஜெட்டில் நிதி அமைச்சர் என்ன மாதிரியான அறிவிப்புகளை வெளியிடுவார் என்று நிறைய எதிர்பார்ப்புகள் எழுந்தது. முக்கியமாக நடுத்தர மக்கள் பயன் அடையும் வகையில் நிறைய மாதிரியான அறிவிப்புகள் வெளியாகி வருகிறது.

எப்படி இருந்தது
நாட்டில் தற்போது ரூ.2.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வருமான வரி கிடையாது. கடந்த வருடம் இந்த வருமான வரி விதிப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டது. அதன்படி ரூ.2.5 - ரூ.5 லட்சம் வருவாய்க்கு 5% வரி செலுத்த வேண்டி இருந்தது. ஆனால் இந்த தொகையும் ரிட்டர்ன்ஸ் செலுத்தும் போது ரிபேட் தொகையாக மீண்டும் வருமான வரி செலுத்தியவருக்கே அளிக்கப்பட்டு விடும்.
இது போக ரூ.5-10 லட்சம் வருவாய்க்கு 20% வரியும், ரூ.10 லட்சத்துக்கும் அதிகமான வருவாய்க்கு 30% வரியும் விதிக்கப்பட்டு வருகிறது. சமீப ஆண்டுகளாக வருமான வரிவிலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படவே இல்லை.

கோரிக்கை வைத்தார்
பல வருடங்களாக மக்கள் இந்த வருமான வரி வரம்பை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
தற்போது இந்த வரி விதிப்பு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி தனி நபர் வருமான வரியில் நிறைய சலுகைகள் தரப்படுகின்றன, வருமான வரி மேலும் குறைக்கப்படும். ஆண்டுக்கு, 2.5 லட்சம் வருமானம் இருந்தால் வரி கிடையாது. ரூ.2.5 - ரூ.5 லட்சம் வருவாய்க்கு 5% வரி செலுத்த வேண்டும்.
5 லட்சம் முதல் 7.5 லட்சம் வரையிலான வருவாய் ஈட்டுவோர் இனி 10 சதவீதம் வருமான வரி செலுத்தினால் போதும். 7.5 லட்சம் முதல் ரூ.10 லட்சமாக இருந்தால் 15 சதவீதம் வரி செலுத்தினால் போதும், 10 லட்சம் முதல் 12.50 லட்சம் வரை வருவாய் ஈட்டுவோருக்கு 20 சதவீதம் வரி செலுத்தினால் போதும்.

அதிக வரி
12.50 லட்சம் முதல் 15 லட்சம் வரையிலான வருவாய் ஈட்டுவோருக்கு இனி 25 சதவீதம் வரி விதிக்கப்படும், 15 லட்சத்திற்கு மேல் வருவாய் ஈட்டுவோருக்கு 30 சதவீதம் வரி வசூலிக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
வெளியிட்டுள்ளார். ஆனால் இந்த சலுகை விருப்ப தேர்வு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சலுகையை தேர்வு செய்தால், வேறு எந்த விதமான வரிக்கழிவு சலுகையையும் பெற முடியாது.

என்ன சலுகை
அதாவது பிஃஎப், ஐந்து வருட நிரந்தர வைப்புத்தொகை, தேசிய சேமிப்பு பத்திரம், கிஷன் விகாஸ் பத்திரம், செல்வமகள் சேமிப்பு திட்டம், என்பிஎஸ், லைஃப் இன்சூரன்ஸ், ஹெல்த் இன்சூரன்ஸ், மாற்றுத் திறனாளிகளுக்கான வரிச்சலுகைகள், வீட்டு கடன் மற்றும் வீட்டுக் கடன் வட்டி ஆகிய வரிக்கழிவு சலுகைகளை பெற்றால், இந்த புதிய வருமான வரி சலுகையை பெற முடியாது.
புதிய வருமான வரி சலுகையை பெற்றால், முன்னர் குறிப்பிட்ட வரிக்கழிவு சலுகையை பெற முடியாது. ஏதாவது ஒரு வகையில் இந்த புதிய வரி திட்டம் காரணமாக, வரி செலுத்த வேண்டிய நிலைதான் இருக்கிறது. அதனால் இந்த சலுகை காரணமாக பெரிய அளவில் பலன்கள் எதுவும் கிடையாது, என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications