சீனாவை பின்பற்றுங்கள்.. வேலைவாய்ப்பு தானாக உருவாகும்.. பொருளாதார ஆய்வு அறிக்கையில் செம ஐடியா!
இந்தியா சீனாவை பின்பற்றி செயல்பட்டால் அதிக அளவில் வேலைவாய்ப்பை உருவாக்கலாம் என்று 2019-2020 ஆண்டிற்கான பொருளாதார ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.
Recommended Video
டெல்லி: இந்தியா சீனாவை பின்பற்றி செயல்பட்டால் அதிக அளவில் வேலைவாய்ப்பை உருவாக்கி, பொருளாதாரத்தை சரி செய்ய முடியும் என்று 2019-2020 ஆண்டிற்கான பொருளாதார ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.
இந்திய நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. இதில் குடியரசுத் தலைவர் உரையாற்றினார். இந்த நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இரண்டாவது முறையாக நாளை இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
பொருளாதார மந்தநிலையை மேம்படுத்தும் அறிவிப்புகள், வேலைவாய்ப்பு, தங்க கையிருப்பு, பணமதிப்பு, வருமான வரிக் குறைப்பு,ஜிஎஸ்டி வரிக் குறைப்பு, வட்டிக் குறைப்பு, வீட்டு வசதித் திட்டம், வருமான வரிச் சலுகைகள் உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது,.

என்ன சர்வே
இந்த நிலையில் பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் இன்று இந்திய பொருளாதாரம் குறித்த 2019-2020 பொருளாதார ஆய்வு அறிக்கை வெளியாகி உள்ளது. இதில், தற்போது இருக்கும் சூழ்நிலையில் இந்தியாவில் வேலைவாய்ப்பு பெரிய பிரச்சனையாக உள்ளது. சீனாவை போல இந்தியா வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும். மிகவும் தரமான, தகுதி வாய்ந்த, ஆற்றல் மிகுந்த பணியாளர்களை, பணிகளை இந்தியா உருவாக்க வேண்டும்.

என்ன ஆராய்ச்சி
2025க்குள் இந்தியாவில் 4 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டு இருக்க வேண்டும். 2030க்குள் 8 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டு இருக்க வேண்டும். இதன் மூலம் மேக் இன் இந்தியா திட்டத்தை உலகம் முழுக்க பெரிய அளவில் கொண்டு செல்ல முடியும். இதற்கு சீனாவை பின்பற்ற வேண்டும். சீனா தங்கள் குடிமகன்களுக்கு வேலை கொடுக்க எந்த திட்டத்தை பயன்படுத்தியதோ அதே திட்டத்தை பயன்படுத்த வேண்டும்.

ஏற்றுமதி எப்படி
மிக முக்கியமாக ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும். தொழில்நுட்ப துறையில் ஏற்றுமதியை அதிகமாக்க வேண்டும். அதிக அளவு ஏற்றுமதிதான் சீனாவின் வேலை வாய்ப்பை அதிகரித்தது. இதனை மூலம் அங்கு பலர் வேலை பெற்றனர். இதனால் தனி நபர் வாழ்க்கை தரம் உயர்ந்து நாடும் உயர்ந்தது. இதனால் உற்பத்தி சார்ந்த பணிகளை கவனிக்க வேண்டும். இந்தியா பல்வேறு பொருட்களின் உற்பத்தி தலை நகரமாக விரைவில் மாற வேண்டும்.

வளர்ச்சி
இந்தியாவின் பொருளாதாரம் 2011-2012ல் 8 சதவிகிதமும், 2017-2018ல் 9.98 சதவிகிதமும் உயர்ந்தது , அதேபோல் வேலைவாய்ப்பு 2.62 கோடி உருவானது. இது வரும் நிதி ஆண்டில் அதிகரிக்கும். சீனாவை நாம் பின்பற்றி செயல்பட்டால் 2025ல் இந்தியாவின் பொருளாதாரம் புதிய உச்சத்தை தொடும். இந்தியாவின் பொருளாதாரம் அப்போது 7 டிரில்லியன் என்ற இலக்கை 2025ல் அடையும் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications