வெளிநாட்டில் பணியாற்றும் இந்தியர்களுக்கு வருமான வரியா? பட்ஜெட் என்ன சொல்கிறது.. நிர்மலா விளக்கம்!
வெளிநாட்டில் பணியாற்றும் இந்தியர்களுக்கு வருமான வரி விதிப்பது தொடர்பாக பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பிற்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.
Recommended Video
டெல்லி: வெளிநாட்டில் பணியாற்றும் இந்தியர்களுக்கு வருமான வரி விதிப்பது தொடர்பாக பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பிற்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். அதில் வெளிநாட்டில் சம்பாதிக்கும் பணத்திற்கு இங்கு வரி கிடையாது என்று கூறியுள்ளார். ஆனால் உள்நாட்டில் இருக்கும் சொத்துக்கு வரி விதிக்கப்படும்.
இந்திய நாடாளுமன்றத்தில் நடப்பு நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் நேற்று முதல்நாள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இரண்டாவது முறையாக இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இதில் வருமான வரி அறிவிப்பு தொடர்பான முக்கியமான அறிவிப்புகள் வெளியானது. ஆனால் இந்த வருமான வரி அறிவிப்புகள், சீர் திருத்தங்கள் பெரிய அளவில் மக்களுக்கு பலன் அளிக்காது என்று விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

எப்படி
தற்போதைய வழக்கப்படி, வெளிநாட்டில் இருக்கும் இந்தியர்கள் இந்தியாவில் வரி செலுத்த தேவையில்லை. அதேபோல் அவர்கள் இந்தியாவில் இருக்கும் சொத்துக்களுக்கும் வரி செலுத்துவதில்லை. உதாரணமாக வெளிநாட்டில் வாங்கும் சம்பளத்திற்கு அவர்கள் இந்தியாவில் வரி செலுத்த மாட்டார்கள். அதேபோல் அந்த வருவாய் மூலம் இந்தியாவில் தொழில் செய்தால், இந்தியாவிலும் அவர்கள் வரி செலுத்த மாட்டார்கள்.

என்ன வெளிநாடு
இந்த நிலையில்தான் வெளிநாட்டில் பணியாற்றும் இந்தியர்களுக்கு வருமான வரி விதிப்பது தொடர்பாக பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியானது. ஆனால் இந்த அறிவிப்பு நிறைய குழப்பத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பிற்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். அதில் வெளிநாட்டில் சம்பாதிக்கும் பணத்திற்கு இங்கு வரி கிடையாது என்று கூறியுள்ளார். அவர்கள் எங்கே வேலை பார்க்கிறார்களோ அங்கே வரி கொடுத்தால் போதும். இங்கே அளிக்க வேண்டியது இல்லை.

மத்திய கிழக்கு
மத்திய கிழக்கு நாடுகளில் சிலவற்றில் வருமான வரி கிடையாது. அப்படி வருமான வரி இல்லாதவர்களும் இந்தியாவில் வருமான வரி அளிக்க வேண்டியது இல்லை. ஆனால் உள்நாட்டில் இருக்கும் சொத்துக்கு வரி விதிக்கப்படும். உதாரணமாக உள்நாட்டில் வீடு இருந்து, அதை வாடகைக்கு கொடுத்தால் வரி வசூலிக்கப்படும். உள்நாட்டில், வெளிநாட்டு பணத்தையே வைத்து தொழில் தொடங்கி, லாபம் பார்த்தால் அதற்கும் வரி வசூலிக்கப்படும்.

வருமான வரி
இதன் மூலம் வரி அதிகம் வசூலிக்கப்படும் என்று நிதி அமைச்சக கூறுகிறது. இந்த புதிய விதிமுறை இந்த நிதி ஆண்டில் அமலுக்கு வரும் என்கிறார்கள். முக்கியமாக அரபு நாடுகளில் வருமான வரி கட்டமால் இருக்கும் நபர்களை குறி வைத்து இந்த சட்டம் கொண்டு வரப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு அரபு நாடுகளில் இருக்கும் இந்தியர்கள் மட்டுமின்றி வேறு வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications