சராசரி மாத மொத்த ஜிஎஸ்டி வரி வருவாய் இரட்டிப்பாகி ரூ.1.66 லட்சம் கோடியாக உயர்வு: நிர்மலா சீதாராமன்
டெல்லி: நாட்டின் சராசரி மாத மொத்த ஜிஎஸ்டி வரி வருவாய் இரட்டிப்பாகி ரூ.1.66 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது என்று மத்திய இடைக்கால பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இது தொடர்பாக மத்திய இடைக்கால பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: இந்தியாவில் மிகவும் பன்முகப்படுத்தப்பட்ட மறைமுக வரி விதிப்பு முறையை ஒருங்கிணைத்து, சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறை (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட்டதன் மூலம், வர்த்தகம் மற்றும் தொழில்துறை மீதான இணக்கச் சுமை குறைந்துள்ளது.

ஒரு முன்னணி ஆலோசனை நிறுவனம் சமீபத்தில் நடத்திய ஆய்வின்படி, 94 சதவீத தொழில்துறையினர் ஜிஎஸ்டி குறித்து நேர்மறையாகக் கருத்துத் தெரிவித்துள்ளனர். 80 சதவீதம் பேர், இது விநியோகத் தொடர் விரிவாக்கத்திற்கு வழிவகுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்," என்று நிதி அமைச்சர் கூறினார். அதே நேரத்தில், ஜிஎஸ்டி-யின் வரி வருவாய் இரு மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது என்றும், சராசரி மாதாந்திர மொத்த ஜிஎஸ்டி வருவாய் இந்த ஆண்டு கிட்டத்தட்ட இரட்டிப்பாகி ரூ. 1.66 லட்சம் கோடியாக உள்ளது.
ஜிஎஸ்டி-க்கு பிந்தைய காலகட்டத்தில் மாநிலங்களுக்கு விடுவிக்கப்பட்ட இழப்பீடு உள்ளிட்டவற்றால் மாநிலங்களின் எஸ்ஜிஎஸ்டி வருவாய் 2017-18 முதல் 2022-23 வரை 1.22 சதவீத உயர்வை எட்டியுள்ளது. ஜிஎஸ்டிக்கு முந்தைய 2012-13 முதல் 2015-16 வரையிலான நான்காண்டு காலத்தில் துணை வரிகளிலிருந்து மாநிலங்களின் வருவாய் வரி மிதப்பு வெறும் 0.72 மட்டுமே இருந்தது.

சரக்கு போக்குவரத்து செலவுகள் மற்றும் வரிகள் குறைக்கப்பட்டுள்ளதால், பெரும்பாலான பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் குறைந்துள்ளன.இதனால் நுகர்வோர்கள் பயன் அடைந்துள்ளனர். இவ்வாறு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications