6வது முறையாக நிர்மலா சீதாராமன்.. பட்ஜெட் தாக்கல் செய்யும் நேரம் இதுதான்.. Live ஆக பார்ப்பது எப்படி?
டெல்லி: 2024 - 2025 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. பட்ஜெட் தாக்கல் நிகழ்வுகளை எங்கே எப்போது எப்படி பார்ப்பது? வாருங்கள் பார்க்கலாம்.
2024 - 2025 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை வரும் பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு புதிய அரசாங்கம் ஆட்சி அமைக்கும் வரை நடைமுறையில் இருக்கும். மே அல்லது ஜூனில் புதிய அரசு அமைய உள்ளதால், அது வரையிலான காலகட்டத்திற்கு இந்த இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

2024-2025 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் பிப்ரவரி 1 ஆம் தேதி காலை 11 மணிக்கு, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. வரவிருக்கும் நிதியாண்டிற்கான அரசாங்கத்தின் வருவாய் மற்றும் செலவுத் திட்டங்களை கோடிட்டுக் காட்டும் இந்த பட்ஜெட் இந்தியாவின் பொருளாதார நாட்காட்டியில் ஒரு முக்கியமான நிகழ்வாகும்.
இந்தியாவின் பொருளாதார வரைபடமான பட்ஜெட் வெளியிடப்படுவவதைக் காண ஆர்வமுள்ளவர்கள், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் உரையின் நேரடி ஒளிபரப்பை சன்சாத் டிவி மற்றும் தூர்தர்ஷன் தொலைக்காட்சி மற்றும் அவற்றின் யூடியூப் சேனல்களில் பார்க்கலாம். மேலும் பத்திரிகை தகவல் பணியகம் (PIB) ஆன்லைன் தளங்களில் நேரடி ஒளிபரப்பையும் வழங்கும்.
மேலும், பல்வேறு தனியார் செய்தி தொலைக்காட்சிகளிலும் பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களை உடனுக்குடன் பார்க்கலாம். நமது ஒன் இந்தியா தளத்திலும், பட்ஜெட் தாக்கல் பற்றிய செய்திகள், பட்ஜெட்டின் சிறப்பு அம்சங்கள், நிதி அமைச்சரின் பட்ஜெட் உரை உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்.
நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன் ஆறாவது முறையாக இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். நிர்மலா சீதாராமன் தலைமையிலான சிறப்புக் குழு தீவிரமாக இந்த பட்ஜெட்டைத் தயாரித்து வருகிறது. பெரிய அளவிலான மாற்றங்கள் எதுவும் இடைக்கால பட்ஜெட்டில் இருக்க வாய்ப்பு இல்லை என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
ஜனவரி 31, 2024: நாடாளுமன்றத்தின் இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்குகிறது.
பிப்ரவரி 1, 2024 - நேரம் 11 மணி: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
பிப்ரவரி 9,2024: பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 9 வரை நடைபெறும்.
ஏப்ரல் 1, 2024: புதிய நிதியாண்டின் ஆரம்பம்.
மே-ஜூன் 2024: புதிய அரசாங்கம், நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யும்.












Click it and Unblock the Notifications