ராணுவம் முதல் விவசாயம் வரை.. எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு? மத்திய பட்ஜெட் முழுவிபரம்
டெல்லி: நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இது இடைக்கால பட்ஜெட் என்பதால் 56 நிமிடத்தில் அவர் உரையை முடித்து கொண்டார். இந்நிலையில் தான் எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
மத்திய இடைக்கால பட்ஜெட் நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இது அவரது 6வது பட்ஜெட்டாகும். மொத்தம் 56 நிமிடம் வரை அவர் பட்ஜெட் உரையை வாசித்தார்.

இந்த சமயத்தில் அவர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி ஆனாலும் வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் எதையும் அவர் செய்யவில்லை. வருமான வரி உச்சவரம்பில் பழைய நிலையை தொடரும் என அவர் அறிவித்தார்.
இந்நிலையில் தான் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் துறை வாரியான நிதி ஒதுக்கீடு குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, அதிகபட்சமாக மத்திய பாதுகாப்பு துறைக்கு (ராணுவம்) அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதாவது ரூ.6.2 லட்சம் கோடி மத்திய பாதுகாப்பு அமைச்சகத்துக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு அடுத்தப்படியாக உள்கட்டமைப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்துக்கு ரூ.2.78 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரயில்வே அமைச்சகத்துக்கு ரூ.2.55 லட்சம் கோடி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் உணவு மற்றும் பொது வினியோகத்துறை அமைச்சகத்துக்கு ரூ.2.13 லட்சம் கோடியும், மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு 2.03 லட்சம் கோடியும், கிராமப்புற மேம்பாட்டு துறை அமைச்சகத்துக்கு ரூ.1.77 லட்சம் கோடியும், மத்திய ரசாயனம் மற்றும் உர அமைச்சகத்துக்கு ரூ.1.68 லட்சம் கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சகத்துக்கு ரூ.1.37 லட்சம் கோடியும், மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நல்வாழ்வு துறை அமைச்சகத்துக்கு ரூ.1.27 லட்சம் கோடியும் ஒதுக்கீடு செய்துள்ளதாக இடைக்கால பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications