Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒவ்வொரு ஆண்டும் ரூ.1000 கோடி! பட்ஜெட் முடிந்த கையோடு நிர்மலா சொன்ன தகவல்.. தமிழகத்திற்கு ஜாக்பாட்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இன்றைய தினம் 2026-27 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பட்ஜெட் உரையில் குறிப்பிட்ட திட்டங்கள் குறித்து அவர் விளக்கமளித்தார். குறிப்பாக நகர்ப்புற வளர்ச்சிக்கு ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் தொகை குறித்தும் அதில் எந்த நகரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்பது குறித்தும் அவர் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். நிதியமைச்சராக 9வது முறையாக நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இன்றைய தினம் அவரது பட்ஜெட் உரை சுமார் 90 நிமிடங்கள் நீடித்தது. மேலும், அதில் பல முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்று இருந்தது.

Budget 2026 1000 Cr Year per City for Tier 2 amp amp Tier 3 Focus says minister Nirmala Sitharaman

நிர்மலா சீதாராமன்

இதற்கிடையே பட்ஜெட் உரைக்குப் பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். இந்தியப் பொருளாதார வளர்ச்சியைத் தக்கவைத்துக்கொள்வதே தற்போதைய நோக்கம் என்றும் நாட்டின் நீடித்த வளர்ச்சிக்குத் தேவையான சூழலை உருவாக்குவதே முதன்மையான இலக்கு என்றும் தெரிவித்தார். இந்த அணுகுமுறை பொருளாதார வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், பல சீர்திருத்தங்கள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுள்ளன என்ற அவர், இந்த சீர்திருத்த நடவடிக்கைகள் தொடரும் என்றும் குறிப்பிட்டார். உற்பத்தித்திறன் & வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் தேவையான நடவடிக்கை எடுப்போம் என்றும் அவர் உறுதியளித்தார். மேலும், 21-ஆம் நூற்றாண்டு என்பது தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளதால், சாதாரண மக்களும் அதைப் பயன்படுத்திக் கொள்வதை அரசு உறுதி செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.

நகர்ப்புற வளர்ச்சிக்கு நிதி

நகர்ப்புற வளர்ச்சிக்கு ஆண்டுதோறும் ஒரு நகரத்திற்கு ₹1000 கோடி ஒதுக்கப்படுவதாக நிதியமைச்சர் அறிவித்தார். இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை (Tier 2 and Tier 3) நகரங்களின் மேம்பாட்டிற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ரேர் எர்த் மெடல்

'இந்தியா ஸ்டாக்' மற்றும் அறிவுசார் சொத்துரிமை (IP) மேம்பாட்டுக்கான இரண்டு செமிகண்டக்டர் திட்ட அறிவிப்புகள் குறித்தும் செய்தியாளர் சந்திப்பில் சில தகவல்களை அவர் பகிர்ந்து கொண்டார். ₹40,000 கோடி எலக்ட்ரானிக் பாகங்கள் உற்பத்தித் திட்டத்தையும் அவர் குறிப்பிட்டார். இது எலக்டிரானிக் துறையில் இந்தியாவைத் தன்னிறைவு அடையச் செய்யும் என அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், ரேர் எர்த் மெடல்களுக்கு இப்போது வெளிநாடுகளையே பிரதானமாகச் சார்ந்து இருக்கிறோம். அதைக் குறைக்க ஒடிசா, கேரளா, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் ரேர் எர்த் வழித்தடங்கள் அமைக்கப்படும். உள்நாட்டு ஆய்வு மூலம் ரேர் எர்த் மெடல்கள் மற்றும் காந்தங்களுக்கான இறக்குமதித் தேவை குறையும். இந்த வளர்ச்சி இந்தியப் பொருளாதாரத்தில் பல குறிப்பிடத்தக்கத் தாக்கங்களை ஏற்படுத்தும்" என்று அவர் தெரிவித்தார்.

தமிழ்நாட்டிற்கு நிதி கிடைக்கும்

இதில் நகர்ப்புற வளர்ச்சிக்கு ஒதுக்கப்படும் தொகையில் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என அவர் குறிப்பிட்டிருந்தார். இதன் மூலம் தமிழ்நாட்டிற்கு அதிகப் பலன் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களைப் பொறுத்தவரை தமிழகத்தில் கோவை, திருச்சி, மதுரை எனப் பல நகரங்கள் உள்ளன. அந்த நகரங்கள் வளர்ச்சிக்கு நிதி கிடைக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+