Budget 2026: வங்கி சேவைகள் முதல் பாஸ்டேக் வரை.. இன்று முதல் மாறும் முக்கிய விதிகள்.. என்னெல்லாம் பாருங்க
டெல்லி: இன்று 2026 - 2027 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் பல்வேறு எதிர்பார்ப்புகள் நிலவி வருகிறது. இந்த நிலையில் இன்று (பிப்ரவரி 1) முதல் வங்கி முதல் பாஸ்டேக் வரை சில முக்கியமான மாற்றங்கள் செய்யப்படுகின்றன. அதுபற்றிய விவரங்களை பார்க்கலாம்.
2026 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. ஆண்டு தோறும் பிப்ரவரி மாதத்தின் கடைசி நாளில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. இந்த நடைமுறையை 2017 ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு மாற்றியது.

வங்கி முதல் பாஸ்டேக் வரை
அதன்படி அப்போது முதல் ஒவ்வொரு ஆண்டு பிப்ரவரி முதல் நாளில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்ற போதிலும் வழக்கம் போல பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருப்பதால் வரிகளில் மற்றும் சலுகைகள், தங்கம் மீதான இறக்குமதி வரி உள்ளிட்டவை குறையுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதற்கிடையே, பிப்ரவரி 1 முதல் வங்கி முதல் பாஸ்டேக் வரை சில முக்கியமான மாற்றங்கள் செய்யப்படுகின்றன. அதுபற்றிய விவரங்களை பார்க்கலாம்.
வங்கிகளில் மாற்றம்
எஸ்.பிஐ, ஹெச்டிஎப்சி, ஐசிஐசிஐ மற்றும் பிஎன்பி ஆகிய வங்கிகள் சில சேவைகளுக்கான கட்டணங்கள் மற்றும் கார்டு சலுகைகளை மாற்றுகின்றன. ஐஎம்பிபிஎஸ் பரிவர்த்தனை கட்டணம், ரிவார்டு பாய்ண்ட்ஸ் மற்றும் கே.ஒய்.சி அப்டேட்கள் இவற்றில் அடங்கும்.
எஸ்பிஐ வங்கியை பொறுத்தவாரை 25 ஆயிரத்தில் இருந்து 1 லட்சத்திற்கும் வரையிலான ஐஎம்பிபிஎஸ் பரிவர்த்தனைகளுக்கு ரு.2 மற்றும் அதற்கான ஜிஎஸ்டியையும் சேர்த்து கட்டணத்தை வரும் 15 ஆம் தேதி முதல் வசூலிக்க உள்ளன. 1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரையிலான பரிவர்த்தனைகளுக்கு ரூ.6ம், 2 லட்சம் முதல் 5 லட்சம் வரையிலான பரிவர்த்தனைகளுக்கு ரூ.10ம் இனி கட்டணமாக வசூலிக்கப்படும்.
ரிவார்டு பாயிண்ட்ஸ்களில் மாற்றம்
நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கிகளில் ஒன்றான ஹெடிஎப்சி வங்கியில் கிரெடிட் கார்டு ரிவார்டு பாயிண்ட்ஸ்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி 1 முதல் Infinia கிரெடிட் கார்டில் பெறப்படும் ரிவார்ட் பாயிண்ட்ஸை மாதத்திற்கு அதிகபட்சம் ஐந்து முறை மட்டுமே ரிடீம் (பயன்படுத்த) செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, பஞ்சாப் நேஷனல் வங்கி தனது வாடிக்கையாளர்களை கேஒய்சி அப்டேட் செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது. ரிசர்வ் வங்கி அறிவுறுத்தலின் படி பிப்ரவரி 2 ஆம் தேதிக்குள் அப்டேட் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரி மாற்றம்
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட்டில் வரி விகிதங்களில் சில மாற்றங்களால் செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதனால், எரிபொருள் விலை மாறலாம் என்ற எதிர்பார்ப்பு வாகன ஓட்டிகளிடையே நிலவுகிறது. அதேபோல, புகையிலை பொருட்களின் விலை உயர உள்ளது.
பாஸ்டேக் விதிகள்
பாஸ்டேக் தொடர்பான கேஒய்சி (Know Your Customer) சரிபார்ப்பு நடைமுறை இனி நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இனிமேல் பாஸ்ட்டேக் ஆக்டிவேட் செய்யும் நேரத்தில், வாகனத்தின் பதிவு உள்ளிட்ட விவரங்களை நேரடியாக வங்கிகளே சரிபார்க்கும் முறைக்கு மாற்றம் செய்யப்பட உள்ளது.
வாகனங்களின் கேஒய்சி விவரங்களை சரிபார்ப்பதை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இன்று முதல் கைவிட உள்ளது. இனி இந்த பணிகளை வங்கிகளே பார்த்துக்கொள்ளும். பாஸ்டேக் பெற்ற பிறகு கேஒய்சி நடைமுறைகளில் ஏற்படும் தாமதம் வாகன ஒட்டிகளுக்கு பெரும் சிரமத்தை கொடுத்து வந்த நிலையில் இந்த புதிய நடைமுறை பல லட்சம் வாகன ஓட்டிகளுக்கு நிம்மதியை ஏற்படுத்தும் ஒன்றாக உள்ளது. ஏதாவது புகார்கள் வந்தால் மட்டுமே உங்களின் வாகனங்களின் விவரங்களை அளிக்க வேண்டும்.
சிலிண்டர் விலை
மாதம் தோறும் சிலிண்டர் விலை மாற்றியமைக்கப்படுகிறது. அந்த வகையில் இன்று வணிக சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்துள்ளது. தற்போது ஒரு சிலிண்டர் ரூ.1,899.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வீட்டு பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லை. வீட்டு சிலிண்டர் ரூ.868.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications