மீண்டும் நாடாளுமன்றம் முடக்கம்-பிரதமர் மோடி சீனியர்களுடன் ஆலோசனை! எதிர்க்கட்சிகளுடன் கார்கே வியூகம்!
ஆளும் கட்சி, எதிர்க் கட்சி எம்பிக்கள் அமளியால் 4-வது நாளாக இன்றும் நாடாளுமன்றம் முடங்கியது.
டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் 2-வது அமர்வு இன்று 4-வது நாளாக முடக்கப்பட்டுள்ளது. முன்னதாக மூத்த அமைச்சர்களுடன் டெல்லியில் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அதேபோல் எதிர்க்கட்சி தலைவர்களுடன் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பாஜக அரசுக்கு எதிராக ஆலோசனை மேற்கொண்டார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு தொடங்கியது முதலே இரு சபைகளின் நடவடிக்கைகளும் முடங்கி உள்ளன. ஆளும் பாஜகவைப் பொறுத்தவரையில் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் லண்டன் பேச்சை கையில் எடுத்துள்ளது.

அண்மையில் லண்டன் சென்ற ராகுல் காந்தி, அங்கு பேசுகையில் இந்திய நாடாளுமன்றம், நீதித்துறை ஒடுக்கப்படுவதாக விம்ர்சித்திருந்தார். வெளிநாட்டில் இருந்து கொண்டு இந்திய நாடாளுமன்றத்தை விமர்சித்ததால் ராகுல் காந்தியை கண்டிக்க வேண்டும்; ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என மூத்த அமைச்சர்கள் இருசபைகளிலும் வலியுறுத்தினர். பாஜக எம்.பி.க்கள் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என குரல் கொடுத்து வருகின்றனர்.

ஆனால் காங்கிரஸ் கட்சியோ இதனை திட்டவட்டமாக நிராகரித்து வருகிறது. ராகுல் காந்தி ஒருபோதும் மன்னிப்பு கேட்கமாட்டார் என்றார் மல்லிகார்ஜூன கார்கே. மேலும் அதானி குழும மோசடிகள் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பது எதிர்க்கட்சிகள் கோரிக்கை. அத்துடன் எதிர்க்கட்சி தலைவர்களை குறிவைக்கும் விசாரணை ஏஜென்சிகளுக்கும் எதிர்க்கட்சி எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். டெல்லியில் நேற்று எதிர்க்கட்சி எம்பிக்கள் பேரணியும் நடத்தி இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து இன்று நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்பாக பிரதமர் மோடி, மூத்த அமைச்சர்களை அழைத்து ஆலோசனை நடத்தினார். அதேபோல், காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, எதிர்க்கட்சி எம்பிக்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த நிலையில் இன்று 4-வது நாளாக நாடாளுமன்றத்தின் இரு சபைகளும் முடங்கியது. இன்று காலை சபை தொடங்கியதும் அமளி தொடர்ந்ததால் சபை நடவடிக்கைகள் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன. ஆளும் கட்சி எம்பிக்கள், ராகுல் காந்தி விவகாரத்தை கையில் எடுத்து முழக்கமிட்டன்ர். எதிர்க்கட்சியினரோ அதானி விவகாரத்தில் கோஷம் எழுப்பினர். இதனால் நாடாளுமன்றத்தின் 2 சபைகளும் இன்றும் முடங்கின.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications