சிஏஏ-வில் மாற்றம்.. 2024 வரை வந்த இந்து, கிறிஸ்தவர்கள் உள்பட 6 மதத்தை சேர்ந்தவர்களுக்கு குடியுரிமை
டெல்லி: நம் நாட்டில் சிஏஏ எனும் குடியுரிமை திருத்த சட்டம் அமலில் உள்ளது. இதன்மூலம் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து துன்புறுத்தலுக்கு உள்ளாகி 2024 டிசம்பர் 31ம் தேதி வரை இந்தியா வந்த இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், ஜெயின்கள், பார்சிக்கள், கிறிஸ்தவர்கள் ஆவணங்கள் இல்லாவிட்டாலும் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
நம் நாட்டில் அண்டை நாடுகளாக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் உள்ளன. இந்த நாடுகள் இஸ்லாமிய நாடுகளாகும். இந்த நாடுகளில் சிறுபான்மையினராக இருக்கும் இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பவுத்தர்கள், பார்சிக்கள், கிறிஸ்தவர்கள் அவ்வப்போது துன்புறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றனர்.

இதனால் அவர்கள் நம் நாட்டுக்கு பாதுகாப்பு கோரி அகதிகளாக வருகின்றனர். இவர்களுக்கு குடியுரிமை வழங்க மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி சிஏஏ எனும் குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த மசோதாவில் இஸ்லாமியர்களுக்கும் இந்தியாவில் குடியுரிமை வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள், இஸ்லாமிய அமைப்புகள் கடும் போராட்டங்களை நடத்தினர்.
இந்த எதிர்ப்புக்கு நடுவே நாடாளுமன்றத்தின் இருசபைகளிலும் நிறைவேற்றப்பட்டது. அதற்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்கினார். இதையடுத்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் சிஏஏ நாடு முழுவதும் அமலுக்கு வந்தது. இந்த சட்டத்தின்படி, பாகிஸ்தான், ஆப்கனிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து 2014 டிசம்பர் 31 தேதிக்குள் இந்தியாவுக்கு வந்த இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பவுத்தர்கள், பார்சிக்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும். இவர்களிடம் எவ்வித ஆவணங்களும் இல்லாவிட்டாலும் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும்.
அதன்படி நம் நாட்டில் பலருக்கும் குடியுரிமை வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும் 2014 டிசம்பர் 31ம் தேதிக்கு பிறகு பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தில் இருந்து இந்தியா வந்த இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பவுத்தர்கள், பார்சிக்கள், கிறிஸ்தவர்கள் வெளியேற்றப்படும் அச்சம் எழுந்தது.
குறிப்பாக கடந்த ஆண்டு வங்கதேசத்தில் நடந்த வன்முறையில் நிறையபேர் நம் நாட்டுக்கு அகதிகளாக வந்துள்ளனர். இதனால் அவர்களின் நிலை கேள்விக்குறியானது. இந்நிலையில் தான் சிஏஏ சட்டத்தில் முக்கிய மாற்றம் செய்து இன்று மத்திய உள்துறை அமைச்சகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி குடியுரிமை பெறுவதற்கான காலஅவகாசம் 2014 டிசம்பர் 31 என்று இருந்ததை 2024 டிசம்பர் 31 என்று நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
அதாவது பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தில் இருந்து மததுன்புறுத்தல் காரணமாக 20214 டிசம்பர் 31 வரை வந்த இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பவுத்தர்கள், பார்சிக்கள், கிறிஸ்தவர்கள் பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட ஆவணங்கள் எதுவும் இல்லாவிட்டாலும், காலாவதியாகி இருந்தாலும் அவர்கள் குடியுரிமை பெறலாம் என்று முன்பு கூறப்பட்டு இருந்தது. தற்போது மத்திய அரசின் அறிவிப்பு என்பது 2014 டிசம்பர் 31ம் தேதி மட்டுமின்றி அதன்பிறகு வந்தவர்களும் அதாவது 2024 டிசம்பர் 31 வரை மததுன்புறுத்தல் காரணமாக நம் நாட்டுக்கு வந்தவர்களும் குடியுரிமைக்கு விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications