அதிக ஒலி, இரைச்சலால் கூட மாரடைப்பு ஏற்படும் ரிஸ்க் அதிகம்?.. ஆய்வில் வெளியான "ஷாக்" தகவல்
திருமணம் போன்ற விழாக்களில் அதிக சத்தத்துடன் போடப்படும் ஒலியாலும் இதயத்திற்கு பாதிப்பு ஏற்படலாம் என்று ஆய்வுகளில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி: திருமணம் போன்ற விழாக்களில் அதிக சத்தத்துடன் போடப்படும் ஒலியாலும் இதயத்திற்கு பாதிப்பு ஏற்படலாம் என்று ஆய்வுகளில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் சமீப காலமாக திருமண நிகழ்ச்சிகளின் போது ஏற்பட்ட மாரடைப்பு மரணங்கள் அதிகரித்த நிலையில், அதிக ஒலியால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த ஆய்வு முடிவுகள் என்ன சொல்லியிருக்கின்றன என்பதை இங்கே பார்க்கலாம்.
கடந்த சில மாதங்களாக மாரடைப்பு ஏற்பட்டு இளம் வயதினர் கூட அகால மரணம் அடையும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன.
நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும் நபர்கள் கூட இந்த திடீர் மாரடைப்பினால் உயிரிழப்பதுதான் பெரும் அதிர்ச்சி அளிக்கக் கூடியதாக இருக்கிறது.

திருமண மேடையிலேயே மரணம்
குறிப்பாக கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 4 ஆம் தேதி பீகாரை சேர்ந்த சுரேந்திர குமார் என்ற 22 வயது இளைஞர் தனது திருமணத்தின் போது திடீரென மண மேடையிலேயே சரிந்து விழுந்து உயிரிழந்தார். திருமண நிகழ்ச்சியில் அதிக டெசிபலுடன் எழுப்பப்பட்ட டிஜே இசையால் அசவுகரியம் இருப்பதாக கூறிய சிறிது நேரத்தில் இறந்ததாக குடும்பத்தினர் கூறியிருந்தனர். அதேபோல், தெலுங்கானாவில் 19 வயது இளைஞர் ஒருவர் உறவினர் திருமண நிகழ்ச்சியில் அங்கு ஓடிக் கொண்டு இருந்த இசைக்கு துள்ளல் ஆட்டம் போட்டுக் கொண்டு இருந்தார். அப்போது திடீரென அங்கேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.

குரூப் டேன்ஸ் ஆடியபோது சாவு
இது மட்டும் இன்றி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஒரு துயர நிகழ்வு நடைபெற்றது. உத்தர பிரதேசத்தின் வாரணாசி பிப்லானி கத்ராவில் நடைபெற்ற இரு திருமண நிகழ்ச்சியில் நடனம் ஆடிய நபர் ஒருவர் உயிரிழந்தார். திருமண விழாவில் அங்கிருந்தவர்களுடன் குரூப் டேன்ஸ் ஆடிக் கொண்டு இருந்த போது அங்கேயே நிலைகுலைந்து விழுந்து உயிர் இழந்தது தொடார்பான வீடியோ காட்சிகளும் இணையத்தில் வேகமாக பரவின.

ஐரோப்பிய மருத்துவ இதழ்
இப்படி சமீப காலமாக இசை நிகழ்ச்சிக்கு மத்தியில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இளம் வயதினர் உயிரிழப்பதால் அங்கு ஒலிபரப்பபடும் அதிக இசைக்கும் இந்த மரணங்களுக்கும் தொடர்பு இருக்குமா? என்ற சந்தேகமும் எழாமல் இல்லை. இந்நிலையில் திருமண விழாக்களில் அதிக சத்தத்துடன் நடத்தப்படும் இசை நிகழ்ச்சிகளால் மாரடைப்பு ஏற்படலாம் என்ற ஆய்வு முடிவுகள் கூறியிருக்கின்றன. கடந்த 2019 ஆம் ஆண்டு ஐரோப்பிய மருத்துவ இதழ் ஒன்று அதிக சத்தத்துடன் கூடிய இசை பலவீனமாக மாற்றும் என்ரு கூறியிருக்கிறது.

5 ஆண்டுகளாக ஆய்வு
இது தொடர்பாக அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளதவது:- தொடர்ச்சியாக அதிக சத்தங்கள் எழும் பகுதிகளான பிசியான மார்க்கெட் பகுதிகளில் வசிக்கும் நபர்கள் மற்றும் பணியாற்றும் நபர்களை கண்டறிந்து சுமார் 500 ஆரோக்கியமான நபர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. கிட்டதட்ட 5 ஆண்டுகளாக இந்த ஆய்வு நடத்தப்பட்டு இருக்கிறது. இதில் இதயம் தொடர்பான எந்த நோய் அறிகுறிகளும் இல்லாதவர்கள் கூட இருதயம் தொடர்பான பாதிப்புகளுக்கு ஆளாவது கண்டறியப்பட்டு உள்ளது.

மாரடைப்பு, பக்கவாதம் உள்ளிட்ட..
காற்று மாசுபாடு உள்பட இதய பாதிப்புகளை ஏற்படுத்தும் பிற காரணிகளை சரி செய்த பிறகு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், சரசாரியாக ஒரு நாள் என்ற அளவில் 5 டெசிபல் சத்தத்தை அதிகப்படுத்தும் போது மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் இருதயம் தொடர்பான பிற தீவிர பாதிப்புகள் 34 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த அதிக டெசிபல் ஒலி மூளையிலும் பாதிப்பை சிறிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியதாம். இதேபோன்ற ஒரு ஆய்வு ஜெர்மனியில் உள்ள மைன்ஸ் மருத்துவ பல்கலைக்கழகம் தரப்பிலும் நடத்தப்பட்டுள்ளது.

இதயத்திற்கு தீங்கை ஏற்படுத்துகிறதாம்
35-வயது முதல் 74 வயது வரை உள்ள 15 ஆயிரம் பேரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் படி இசையோ அதிக இரைச்சலோ.. எதுவாக இருந்தாலும் சரி ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் அதிகரித்தால் மனிதன் இதயத்திற்கு தீங்கை ஏற்படுத்துகிறதாம். அதிக சத்தத்தை கேட்கும் போது இருதய துடிப்பு வேகமாக அதிகரிக்கிறதாம். அதாவது ஜாக்கிங் மற்றும் உடல் பயிறசியில் ஈடுபடும் போது அதிகரிக்கும் அளவுக்கு இருதய துடிப்பு அதிகரிக்கிறதாக ஆய்வு கூறியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications