இன்னொரு பாகிஸ்தானாக கனடா! தேடும் காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம்- இந்தியாவுக்கு பச்சை துரோகம்!
டெல்லி: காலிஸ்தான் பயங்கரவாதிகள் விவகாரத்தில் இந்தியாவில் முதுகில் குத்திய கனடா, பாகிஸ்தானைப் போல இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகளின் புகலிடமாகவும் இருந்து வருகிறது என்கின்றனர் வெளியுறவுத் துறை அதிகாரிகள்.
1990களுடன் காலிஸ்தான் எனும் சீக்கியர் தனிநாடு கோருகிற பயங்கரவாத இயக்கத்துக்கு நமது பாரதம் முடிவு கட்டிவிட்டது. அதற்கு முனன்ர் வரை பற்றி எரிகிறது பஞ்சாப் என்பது தேசிய நாளேடுகளின் தலைப்புச் செய்தி. ஆனால் காலிஸ்தான் தனிநாடு கோரிய பயங்கரவாதிகளின் கதைகள் அடுத்தடுத்து முடிக்கப்பட்டது.

இதனால் எச்ச சொச்சம் இருந்த பயங்கரவாதிகள் போலி பாஸ்போர்ட்டுகள் மூலம் இந்தியாவை விட்டு தப்பி ஓடினர். சட்டவிரோதமாக இந்தியாவை விட்டு வெளியேறி பாகிஸ்தானுக்குள் ஓடி பதுங்கினர். இப்படி தப்பி ஓடியவர்கள் அடைக்கலம் புகுந்த நாடுகளில் முதன்மையானவை பாகிஸ்தான், கனடா. அங்கும் போய் காலிஸ்தான் தனிநாடு கோரும் அமைப்புகளை நடத்தி வந்தனர் இந்த பயங்கரவாதிகள்.
கிடப்பில் இந்தியாவின் கோரிக்கை: ஒரு கட்டத்தில் பாகிஸ்தான், கனடாவில் இருந்து இந்தியாவில் கொலைகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடவும் செய்தனர். இதனால் நமது மத்திய அரசு காலிஸ்தான் பயங்கரவாதிகள் 9 பேரை இந்தியாவுக்கு நாடு கடத்தியாக வேண்டும் என பல ஆண்டுகளாக கனடாவிடம் போராடிக் கொண்டிருக்கிறது. ஆனால் கனடாவோ இந்தியாவின் கோரிக்கையை கிஞ்சித்தும் மதிக்காமல் பாகிஸ்தானைப் போலவே முதுகில் குத்துகிற துரோகத்தையே இடைவிடாமல் செய்கிறது.

கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்புகள்: கனடாவை தளமாக கொண்டு செயல்படுகிற காலிஸ்தான் பயங்கரவாத அமைப்புகள்: 1) உலக சீக்கியர் அமைப்பு 2) காலிஸ்தான் புலிப் படை 3) நீதிக்கான சீக்க்கியர் அமைப்பு 4) பப்பர் கல்சா இண்டர்நேஷன்ல். பப்பர் கல்சாவின் தலைமையகம் பாகிஸ்தான்.
நிஜ்ஜார் படுகொலையும் இந்தியா மீதான பழியும்: இந்தியாவால் தேடப்பட்ட குற்றவாளிகளில் ஒருவர்தான் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார். 1990களில் இந்தியாவில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலையான நிஜ்ஜார் ரவி சர்மா என்ற பெயரில் போலி பாஸ்போர்ட்டுடன் கனடாவுக்கு ஓடிப் போனார். அங்கிருந்து பாகிஸ்தானுக்கு வந்து காலிஸ்தான் பயங்கரவாதிகளை சந்தித்துவிட்டு சென்றார். பாகிஸ்தானில் பஞ்சாப் முன்னாள் முதல்வர் பியாந்த் சிங் கொலையாளிகளை சந்தித்தார் நிஜ்ஜார். காலிஸ்தான் புலிப்படை அமைப்புக்குள் நிகழ்ந்த உள் மோதலில் நிஜ்ஜார் கொல்லப்பட இப்போது அந்தப் பழியை நமது இந்தியா சுமந்து கொண்டு நிற்கிறது.

9 பயங்கரவாதிகள்: 1990களில் இந்தியாவில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு தப்பி ஓடியவர் குர்வந்த் சிங். இவருக்கு எதிராக இண்டர்போல் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கனடாவில் பதுங்கி இருக்கும் குர்வந்த் சிங்கை இந்தியாவிடம் ஒப்படைக்க எத்தனையோ முறை கோரிக்கை விடுத்தும் செவியில் ஏற்றிக் கொள்ளாமல் இழுத்தடிக்கிறது கனடா. இப்படி மொத்தம் 9 பயங்கரவாதிகளை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என இன்னமும் போராடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் கனடாவோ, நிஜ்ஜார் சாவை முன்வைத்து இந்தியாவுடன் மோதிக் கொண்டிருக்கிறது. கனடாவின் இத்தகைய பயங்கரவாத போக்கு, சர்வதேச அரங்கில் அந்த நாடு வெகுவிரைவில் தனிமைப்படுத்தக் கூடிய அபாயத்தையே எதிர்கொள்ளும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications