கனடா: சீக்கிய தீவிரவாதி நிஜ்ஜார் படுகொலை- விவாதப் பொருளான இந்திய ‘ரா’ பற்றி உங்களுக்கு தெரியுமா?
டெல்லி: ஓடிடி தளங்களில் தொடர்கள், படங்களைப் பார்ப்பவர் எனில் இந்தியாவின் 'ரா' அமைப்பின் செயல்பாடுகளை ஓரளவேனும் உங்களால் யூகிக்க முடியும். இல்லை எனில் கனடாவில் இருக்கிற சீக்கிய பயங்கரவாதியை எப்படி இந்தியா படுகொலை செய்திருக்க முடியும்? என்ற கேள்வியை கேட்டுக் கொண்டே இருக்கலாம்.
உலக நாடுகள் அனைத்துக்குமே "ரா" (ரிசர்ச் அண்ட் அனாலிசிஸ் விங்) போன்ற வெளிநாடு விவகாரங்களுக்கான அமைப்பு இருக்கிறது. சோவியத் யூனியன் (இன்றைய ரஷ்யாவுக்கு முந்தையது) காலத்தில் அதன் உளவு அமைப்பு "கேஜிபி" பேசு பொருளாக இருந்தது. இன்றைக்கும் அமெரிக்காவின் சிஐஏ விவாதப் பொருளாகவே இருக்கிறது. இந்த பட்டியலில் இஸ்ரேலின் மொசாத் அமைப்பு அதிதீவிரமான செயல்பாடுகளைக் கொண்டதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்துகளை முன்வைப்பர்.

சரி நம்ம ஊர் 'ரா' அமைப்புக்கு வருவோம்? முதலில் சொன்னது போல ஓடிடி தளங்களில் பார்த்தீர்கள் என்றால், டெல்லியில் ரா செக்ரெட்டரி ஒருவர் இருப்பார்.. எங்கோ ஒரு நாட்டில் ஏதோ ஒரு தொழில் செய்து கொண்டிருக்கும் ஒரு நபரை அழைத்து மொராக்கோ அல்லது ஈராக்கில் இருக்கிறது டார்கெட் என அசைன்மென்ட் கொடுப்பார்.. அந்த நபரும் டார்கெட் எனப்படுகிற இந்தியாவுக்கு குடைச்சல் கொடுக்கிற 'ஆசாமி' கதையை முடித்துவிட்டு வருவார். கிட்டத்தட்ட இப்படித்தான் 'ரா' ஆபரேசன் நடக்கும். இந்த பாணியைத்தான் கனடாவின் நிஜ்ஜார் படுகொலைக்கு பொருத்தி இந்தியா மீது அவதூறு பரப்பிக் கொண்டிருக்கிறது கனடா அரசு.
'ரா' அமைப்பின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் பிரதமர் உள்ளிட்டோருடன் எப்போதும் தொடர்பில் இருப்பார்கள். ரா அமைப்பின் அலுவலகம் என்பது கண்டங்கள் வாரியாக/ வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் ஆப்பிரிக்காவுக்கு/ தெற்காசியாவுக்கு என ஒரு செக்ரெட்டரி இருப்பார் அல்லவா? அது போல சில நாடுகளை உள்ளடக்கிய ஒரு பிரிவு உருவாக்கப்பட்டு அதற்கான 'ரா' அதிகாரிகள் பணியாற்றுவர். ரா அமைப்புக்கு என இந்திய விமானப் படையுடன் சேர்ந்த சிறப்பு விமானமும் உண்டு.
ரா அமைப்பின் செயல்பாடுகள், நிதி ஒதுக்கீடு மற்றும் செலவினம் ஆகியவற்றை பகிரங்கப்படுத்தவும் தேவை இல்லை. 'ரா' அமைப்பின் தலைவர் தவிர பெரும்பாலான அதிகாரிகள் எளிதில் அடையாளப்படுத்தப்பட முடியாதவர்களாகவே இருப்பர்.
பொதுவாக ஐபிஎஸ், ஐஆர்எஸ், ஐபிஎஸ் பணிகளில் இணைவதற்கான பயிற்சிகளின் போதே 'ரா' அதிகாரிகள் உருவாக்கப்பட்டுவிடுகின்றனர்.
ஈழப் பிரச்சனைகளின் 'ரா' மற்றும் உளவு அமைப்பான ஐபி ஆகியவை மிகவும் விவாதிக்கப்பட்டதாக இருந்தது. மாலத்தீவு நாட்டில் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி ஒன்றை இலங்கை போராளிக் குழுக்கள் மூலம் 'ரா'நடத்த முயற்சித்த விவகாரம் 1980களில் சர்வதேச பிரச்சனையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications