வெற்றி மேல் வெற்றி.. இந்தியாவின் ராஜதந்திரத்திற்கு முன் மண்டியிட்ட கனடா? எப்படி சாத்தியமானது?
டெல்லி: இந்தியாவின் உறவு வேண்டும்.. அவர்களுடன் நெருக்கமான உறவை நாங்கள் கடைபிடிக்கவே விரும்புகிறோம் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ திடீரென பேட்டி அளித்துள்ளார். அவரின் பேச்சு விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவிற்கு இது மிகப்பெரிய ராஜதந்திர வெற்றியாக பார்க்கப்படுகிறது.
இந்தியா கனடா இடையிலான உறவில் தற்போது மிகப்பெரிய விரிசல் ஏற்பட்டு உள்ளது. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தங்கள் நாட்டு நாடாளுமன்றத்தில் இந்தியாவிற்கு எதிராக பேசிய சில வார்த்தைகள்தான் இந்த குற்றச்சாட்டுகள் அனைத்திற்கும் காரணமாக அமைந்தது.

கனடாவில் இருக்கும் காலிஸ்தானி இயக்கங்கள் இந்தியாவை பிளவுபடுத்த நினைப்பதாக இந்தியா குற்றச்சாட்டு வைக்கிறது. பஞ்சாப் உள்ளிட்ட இந்தியாவின் சில பகுதிகளை பிரித்து சீக்கியர்களுக்கு என்று தனி நாடு உருவாக்குவதே காலிஸ்தானி அமைப்பின் நோக்கம் ஆகும்.
மோதல் காரணம்: இந்த அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகளுக்கு கனடா ஆதரவு கொடுப்பதாக இந்தியா குற்றஞ்சாட்டி வருகிறது. இந்த நிலையில்தான், சீக்கியத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூனில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இந்திய அரசாங்கம் இருக்கலாம் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
இதுதான் இரண்டு தரப்பிற்கும் மோதல் ஏற்பட முக்கியமான காரணம். இதை தொடர்ந்து இந்தியாவின் வெளியுறவு அதிகாரிகளை கனடா வெளியேற்றியது. இதற்கு பதிலடியாக இந்தியாவும் கனடாவின் வெளியுறவு துறை அதிகாரிகளை வெளியேற்றியது. இதை தொடர்ந்து கனடாவிற்கு விசா கொடுப்பதிலும் இந்தியா தடை விதித்தது.
இப்படி போய் கொண்டு இருந்த பிரச்சனையில் அமெரிக்க, பிரான்ஸ், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளை கனடா உள்ளே கொண்டு வந்தது. அவர்களின் உதவியை இந்தியாவிற்கு எதிராக கேட்டது. இதில் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக அந்த நாடுகள் கூறின. ஆனாலும் இந்தியாவிற்கு எதிராக கூட்டு அறிக்கை தாக்கல் செய்யவும், கூட்டு கண்டனம் தெரிவிக்கவும் மேற்கு உலக நாடுகள் மறுத்துவிட்டன.
இந்தியாவிற்கு வெற்றி: இந்த விவகாரத்தில் இந்தியாவை மேற்கு உலக நாடுகள் நேரடியாக எதிர்க்கவில்லை. நேரடியாக கண்டனம் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில்தான் இந்தியாவின் உறவு வேண்டும்.. அவர்களுடன் நெருக்கமான உறவை நாங்கள் கடைபிடிக்கவே விரும்புகிறோம் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ திடீரென பேட்டி அளித்துள்ளார். அவரின் பேச்சு விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
எங்களிடம் புகாருக்கு தேவையான ஆதாரங்கள் இருக்கின்றன. ஆனாலும் நாங்கள் இந்தியாவுடன் நெருக்கமான உறவை கடைபிடிக்கவே விரும்புகிறோம்.

இந்தியா வேகமாக வளரும் பொருளாதாரம் கொண்ட நாடு. அதோடு உலக அரசியலில் முக்கியமான நாடு. அதனால் அவர்களுடன் உறவு கொள்வது முக்கியம். அவர்களுடன் நட்பாக இருப்பது முக்கியம். இந்தோ பசிபிக் உறவில் நாங்கள் நம்பிக்கை கொள்கிறோம். அந்த குழுவில் நாங்கள் ஒன்றாக இருக்கிறோம்.
அதனால் நாங்கள் இந்தியாவுடன் சுமுகமான உறவை மேற்கொள்ளவே விரும்புகிறோம்., அதே சமயம் எங்கள் நாட்டில் ஒரு சட்டம் உள்ளது. எங்கள் நாட்டில் நடைபெற்ற குற்றங்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும். இதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. அதனால் எங்களுக்கு இந்தியா பதில் சொல்ல வேண்டும்.
அதோடு எங்களின் விசாரணைக்கும் ஒத்துழைக்க வேண்டும்., இந்த விஷயம் மிகவும் சீரியஸானது. அதே சமயம் எங்களுடன் இந்தியா உறவு கொள்வதும், நட்பு பாராட்டுவதும் கூட முக்கியம் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications