ரொக்க பணம், மெடிக்கல் கிட் வீட்ல இருக்கனும்! போர் வந்தால் சமாளிப்பது எப்படி? அவசியம் தெரிஞ்சுக்கோங்க
சென்னை: காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலையடுத்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் நாட்டில் நாளை 259 இடங்களில் போர் ஒத்திகை நடத்த மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில், போர் வந்தால் எப்படி சமாளிப்பது என்பது பற்றிய பயிற்சி அளிக்கப்படும். ரொக்க பணம், மெடிக்கல் கிட் வீட்டில் கட்டாயம் இருக்க வேண்டிய பொருட்கள் குறித்தும், என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் விளக்கம் அளிக்கப்படும்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலையடுத்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. சமீப காலங்களில் பார்த்திராத வகையில் போர் பதற்றமானது அதிகரித்துள்ள நிலையில், நாளை போர் ஒத்திகை நடத்த இந்தியா உத்தரவிட்டுள்ளது. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் என 35 மாநிலங்களிலும் இந்த போர் ஒத்திகை நடைபெறுகிறது.

எப்படி செயல்பட வேண்டும்
244 மாவட்டங்களிலும் மக்கள் பாதுகாப்பு நிலைகளை பரிசோதிக்கும் வகையில் இந்த சோதனை நடைபெற உள்ளது. அதவது, ஷெல்டர்கள், எச்சரிக்கை அமைப்புகள், ஒருங்கிணைப்பு வசதிகள், தேவையான பணிகள், பொதுமக்களுக்கு போர்க்காலங்களில் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்த பயிற்சி அளிப்பது ஆகியவை இதில் இடம் பெறும். இந்த போர் ஒத்திகையின் போது, போர்க்காலத்தில் எப்படி செயல்பட வேண்டும்.
ரொக்கமாக பணம், மருத்துவ கிட்
அந்நிய நாட்டு போர் விமானங்கள் எழுந்தால் எழுப்பப்படும் சைரன்களுக்கான அர்த்தம் ஆகியவை பற்றி சொல்லி கொடுக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. அதேபோல, மருத்துவ உபகரணங்கள், கூடுதல் உணவு பொருட்கள், டார்ச்கள் மற்றும் மெழுகுவர்த்திகள் ஆகியவற்றை தங்களிடம் வைத்திருக்க வேண்டும்.
டிஜிட்டல் பரிவர்த்தனைகள், மொபைல் டிவைஸ்கள் செயல் இழந்தால் அவசர தேவைக்கு பயன்படுத்த கையில் ரொக்கமாக சிறிதளவு பணம் வைத்து இருக்க வேண்டும் என ஆகியவற்றை வைத்து இருக்க வேண்டும் என்பதுபோன்ற அறிவுறுத்தல்கள் வழங்கப்படும் என்று சொல்லப்படுகிறது.
எங்கெல்லாம் போர் ஒத்திகை நடக்கிறது?
பஹல்காம் தாக்குதலையடுத்து பாகிஸ்தான் மீது பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது. சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தானியர்கள் வெளியேற உத்தரவு, இந்திய துறைமுகத்துக்கு பாகிஸ்தான் கப்பல்கள் வர தடை என அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வந்தது. இதனையடுத்து தான் மத்திய அரசு நாடு முழுவதும் போர் ஒத்திகை நடத்த அறிவிப்பு வெளியிட்டது.
தமிழகம் உள்பட நாடு முழுவதும் மொத்தம் 259 இடங்களில் போர் ஒத்திகை நடக்கும் என நேற்று மத்திய அரசு அதிரடி அறிவிப்பினை வெளியிட்டது. மேலும் இந்த போர் ஒத்திகையானது நாளை நடைபெறுகிறது. இதற்கான இன்று பாதுகாப்பு செயலாளர் கோவிந்த் தலைமையில் டெல்லியில் அவசர கூட்டம் நடந்தது. இதேபோன்று எந்தெந்த இடங்களில் போர் ஒத்திகை நடைபெறும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் எங்கு நடக்கிறது?
தமிழ்நாட்டினை பொறுத்தவரை தலைநகர் சென்னை மற்றும் கல்பாக்கம் பகுதியில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற இருக்கிறது. இதேபோல் முக்கிய நகரங்களான டெல்லி, மும்பை, பெங்களூர் உள்ளிட்ட இடங்களிலும் போர் ஒத்திகை நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இந்த ஒத்திகை நடைபெற உள்ளது. மொத்தம் 35 மாநிலங்களில் போர் ஒத்திகை நடைபெறுவதற்கான விரிவான அறிக்கையை உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. மொத்தமாக 259 இடங்கள் இந்த பட்டியலில் உள்ளன. வடகிழக்கு மாநிலங்களில் அதிக இடங்கள் இடம் பெற்றுள்ளன. அருணாசல பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் அதிக இடங்களில் போர்க்கால ஒத்திகை நடைபெற உள்ளது.


Click it and Unblock the Notifications
