டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"ஹனிடிராப்!" இந்திய வீரரிடம் நெருக்கமாக பழகி.. ராணுவ தகவல்களை அபேஸ் செய்த பாக். உளவாளி.. என்னாச்சு

Google Oneindia Tamil News

டெல்லி: இந்திய ராணுவத்தைச் சேர்ந்த வீரர் ஒருவர் ரகசிய ஆவணங்களை லீக் செய்ததாக ராஜஸ்தான் போலீசார் கைது செய்துள்ளனர்.

பொதுவாக ஒரு நாட்டின் ராணுவ வீரர்களிடம் இருந்து அதிமுக்கிய தகவல்களைப் பெற எதிரி நாட்டு ராணுவம் பல்வேறு முயற்சிகளை எடுக்கும். பணம், நகை உள்ளிட்ட சொத்துகளை வழங்கி தகவல்களைப் பெற முயலும்.

15 பேர் படுகொலை- தூத்துக்குடி துப்பாக்கிசூடு.. இன்று 4-ம் ஆண்டு நினைவு அஞ்சலி- பலத்த பாதுகாப்பு 15 பேர் படுகொலை- தூத்துக்குடி துப்பாக்கிசூடு.. இன்று 4-ம் ஆண்டு நினைவு அஞ்சலி- பலத்த பாதுகாப்பு

சில சமயங்களில் பெண்களை ராணுவ வீரர்களிடம் நெருங்கிப் பழக வைத்து, அதன் மூலமும் தகவல்களைப் பெறுவார்கள். அப்படியொரு நிகழ்வு தான் இப்போது நடந்துள்ளது.

 கைது

கைது

பாகிஸ்தான் ராணுவத்திற்கு முக்கிய தகவல்களைக் கசியவிட்டதாக பிரதீப் குமார் என்ற இந்திய ராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தான் போலீசார் இவரைக் கைது செய்துள்ள நிலையில், விரைவில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய ராணுவத்தில் பணியாற்றி வரும் 24 வயதான இவர், இந்திய ராணுவம் தொடர்பான தகவல்களைக் கசியவிட்டதற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

 ராணுவ வீரர்

ராணுவ வீரர்

ராஜஸ்தானின் ஜோத்பூரில் தங்கியிருந்த பிரதீப் குமார், பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த பெண் ஒருவருடன் பேஸ்புக் மூலம் தொடர்பு கொண்டார். தன்னை சதம் என்ற இந்து பெண் போலக் காட்டிக் கொண்ட அந்தப் பெண், பிரதீப்புடன் தொடர்பு பேசி வந்துள்ளார். மேலும், தான் மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் இப்போது பெங்களூரில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதாகவும் பிரதீப் குமாரை நம்ப வைத்தார்.

 ரகசிய ஆவணங்கள்

ரகசிய ஆவணங்கள்

இருவரும் தொடர்ச்சியாகப் பல மாதங்கள் பேசி வந்துள்ளனர். இந்தச் சூழலில் சமீபத்தில் திருமண விழாவில் பங்கேற்பதாகக் கூறிக் கொண்டு டெல்லி சென்றுள்ளார். அங்கு இந்திய ராணுவம் தொடர்பான ரகசிய ஆவணங்களை எடுத்துள்ளார். ராணுவம் தொடர்பான ரகசியத் தகவல்களைப் போட்டோ எடுத்து அதை அப்பெண்ணுக்கு அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

 வாட்ஸ்அப்

வாட்ஸ்அப்

அப்பெண் பெங்களூரைச் சேர்ந்தவர் இல்லை பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் என்று இந்தியா புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளன. மேலும், அப்பெண் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ அமைப்பில் பணிபுரிவதாகவும் கூறப்பட்டுள்ளது. பிரதீப் குமாரும் அந்த பாகிஸ்தான் பெண்ணும் சுமார் ஆறு மாதங்களாக வாட்ஸ்அப் மூலம் பேசி வருவதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

 முயற்சி

முயற்சி

இது குறித்து உளவுத்துறை டிஜி உமேஷ் மிஸ்ரா கூறுகையில், "குமார் ரகசிய ஆவணங்களின் படங்களை வாட்ஸ்அப் மூலம் பாகிஸ்தான் ஏஜெண்ட்டுக்கு அனுப்பி உள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் மற்ற வீரர்களைப் பலிகடா ஆக்கவும் அவர் முயன்றுள்ளார். இந்த குற்றத்தில் குமாரின் மற்றொரு பெண் நண்பருக்கும் தொடர்பு உள்ளது" என்றார். சந்தேகத்தின் பேரில் விசாரணைக்காகக் கடந்த மே 18ஆம் தேதி பிரதீப் குமாரை ராஜஸ்தான் போலீசார் காவலில் வைக்கப்பட்டார். இதையடுத்து நேற்று அவர் கைது செய்யப்பட்டார்.

English summary
Indian Army personnel Pradeep Kumar was arrested for allegedly leaking military information to Pakistan: (இந்திய ராணுவ வீரரை ஹனிடிராப் செய்த பாகிஸ்தான் பெண் உளவாளி) Indian military personnel was honeytrapped by a Pakistani woman.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X