காவிரி: பாஜகவுடன் சேர்ந்து கர்நாடகா காங்கிரஸ் அரசு துரோகம்- தமிழ்நாடு மனுவை டிஸ்மிஸ் செய்ய மனு!
டெல்லி: காவிரியில் வினாடிக்கு 24,000 கன அடி நீரை திறக்க கோரும் தமிழ்நாடு அரசின் மனுவை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அரசு பிரமாணப் பத்திரத்தில் வலியுறுத்தி உள்ளது.
காவிரியில் தமிழ்நாட்டுக்கு ஆகஸ்ட் மாதம் 53 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும். ஆனால் தமிழ்நாட்டுக்கு 15 டிஎம்சி நீரை மட்டுமே கர்நாடகா திறந்துவிட்டது. இது தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு முறையிட்டது. ஆனால் காவிரி மேலாண்மை ஆணையமோ வினாடிக்கு 10,000 கன அடி நீரை மட்டுமே தமிழ்நாட்டுக்கு திறந்துவிட உத்தரவிட்டது.

இதனையடுத்து தமிழ்நாட்டுக்கான உரிய காவிரி நீரை திறந்துவிட வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனுத் தாக்கல் செய்தது. தமிழ்நாடு அரசின் இந்த மனுவை நீதிபதி கவாய் தலைமையிலான புதிய பெஞ்ச் விசாரிக்கும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழ்நாடு அரசு தொடர்ந்த காவிரி வழக்கு விசாரணை நாளை நீதிபதி கவாய் பெஞ்ச் முன்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில் இன்று காவிரி வழக்கில் கர்நாடகா அரசு, பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில் தமிழ்நாடு அரசு காவிரியில் வினாடிக்கு 24,000 கன அடிநீரை கோரியிருக்கிறது. கர்நாடகாவில் வறட்சி நிலவும் நிலையில் இவ்வளவு நீரை திறந்துவிட முடியாது. ஆகையால் தமிழ்நாடு அரசு மனுவை உச்சநீதிமன்றம் டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக காவிரியில் தமிழ்நாட்டுக்கு நீரை திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகா பாஜக போராட்டத்தை தொடங்கி வைத்தது. இதனையடுத்து கர்நாடகா விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.மேலும் தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசுக்கு சாதகமாக கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசு செயல்படுவதாகவும் பாஜக குற்றம்சாட்டி இருந்தது.
பின்னர் நேற்று கர்நாடகா அரசு, அனைத்து கட்சிக் கூட்டத்தைக் கூட்டியது. இந்தக் கூட்டத்தில் காவிரி பிரச்சனை தொடர்பாக பிரதமர் மோடியை சந்திக்க முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் இன்று, தமிழ்நாடு அரசின் மனுவை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என கர்நாடகா வலியுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த கர்நாடகா முதல்வர் சித்தராமையா, காவிரி நீர் கோரி தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின் போது கர்நாடகா அரசு தமது தரப்பு வாதத்தை முன்வைக்கும் என்றார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications