கர்நாடகாவின் 'வறட்சி' பிடிவாதம்- தீவிரமான காவிரி சிக்கல்! செப்.18-ல் மேலாண்மை ஆணையம் அவசர கூட்டம்!
டெல்லி: காவிரி பிரச்சனையில் கர்நாடகா காங்கிரஸ் அரசு தொடர்ந்து பிடிவாதம் காட்டும் நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசர கூட்டம் வரும் 18-ந் தேதி கூடுகிறது.
தமிழ்நாட்டுக்கான உரிய காவிரி நீரை திறந்துவிட கர்நாடகா மறுத்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டின் காவிரி டெல்டாவில் குறுவை நெற்பயிர்கள் கருகிக் கொண்டிருக்கின்றன. காவிரி டெல்டா விவசாயிகள் செய்வதறியாமல் விழி பிதுங்கி நிற்கின்றனர்.

காவிரி மேலாண்மை ஆணையம்: டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் வினாடிக்கு 24,000 கன அடி நீரை தமிழ்நாடு கேட்டது. ஆனால் கர்நாடகா திட்டவட்டமாக இதனை தர மறுத்தது. இதையடுத்து வினாடிக்கு 5,000 கன அடி நீரை மட்டும் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. இதற்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றம் போனது. கர்நாடகாவோ வினாடிக்கு 3,000 அல்லது 4,000 கன அடிநீர் என சொற்ப அளவில் நீரை திறந்துவிட்டது.
கர்நாடகா பிடிவாதம்: உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு வரும் 21-ந் தேதி விசாரணைக்கு வர உள்ளது. இதனிடையே காவிரி ஒழுங்காற்று ஆணையமும் கூட தமிழ்நாட்டுக்கு மேலும் 15 நாட்களுக்கு வினாடி 5,000 கன அடி நீரை திறந்துவிட பரிந்துரைத்தது. ஆனால் கர்நாடகாவோ வறட்சி நிலவுகிறது; தண்ணீரை திறக்க முடியாது என்றது. இன்னொரு பக்கம், கன்னட விவசாயிகள் தமிழ்நாட்டுக்கு எதிரான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால் கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியது. இந்தக் கூட்டத்திலும் தமிழ்நாட்டுக்கு நீர் திறக்க முடியாது என சொன்னது கர்நாடகா. அதேநேரத்தில் டெல்லிக்குப் போன கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார், மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து காவிரி பிரச்சனை குறித்து பேசியிருந்தார்.

செப்.18-ல் அவசர கூட்டம்: இந்நிலையில் தற்போது காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசர கூட்டம் வரும் 18-ந் தேதி கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் வறட்சி நிலவுகிறது; 132 ஆண்டுகளில் இல்லாத வறட்சி; அதனால் பல மாவட்டங்களை வறட்சி பாதித்தது என அறிவித்துவிட்டோம் என்கிற பல்லவியை பாடுகிறது. இன்னொரு பக்கம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. இந்த சூழ்நிலையில் வரும் 18-ந் தேதி காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசர கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications