காவிரி மேலாண்மை ஆணையம் கூட்டம் துவங்கியது.. தமிழகத்துக்கு தண்ணீர் வருமா? தலைநகரில் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் இன்று காவிரி மேலாண்மை ஆணையம் கூடியிருக்கிறது.. காவிரியில் தண்ணீர் திறப்பு குறித்து தமிழக, கர்நாடக அதிகாரிகள் இன்றைய கூட்டத்தில் தங்கள் கருத்துக்களை முன்வைத்து வருகிறார்கள்.

தமிழகத்துக்கு தண்ணீர் தர முடியாது என்று கர்நாடக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.. காவிரி ஒழுங்காற்று குழுவின் 99-வது கூட்டம் கடந்த 11-ம் தேதி அன்று டெல்லியில் நடைபெற்றது.

Cauvery Water Cauvery Water Management Karnataka

கூட்டம்: இந்த கூட்டத்திலும், தமிழகத்துக்கு 12-ம் தேதி முதல் 31-ம் தேதி வரையில் 20 நாட்களுக்கு தினமும் 1 டி.எம்.சி. தண்ணீரை வழங்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்திருந்தது..

ஆனால் 20 நாட்களுக்கு 1 டிஎம்சி தண்ணீர் வழங்க முடியாது என்று சொன்ன கர்நாடக முதல்வர் சித்தராமையா, தமிழகத்துக்கு தினமும் ஒரு டிஎம்சி தண்ணீர் திறந்து விடுவதற்கு பதிலாக, வினாடிக்கு 8 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படும் என்று கூறியிருந்தார்.

பரிந்துரை: இப்படி காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரைத்த தண்ணீரை வழங்க கர்நாடக அரசு மறுப்பு தெரிவித்து வருகிறது. தமிழகத்திற்கு கர்நாடக மாநில அணைகளிலிருந்து தினமும் ஒரு டிஎம்சி தண்ணீர் திறந்து விட வேண்டும் கர்நாடகா அரசுக்கு உத்தரவிடப்பட்டும்கூட, கர்நாடக அரசு அதை இன்னமும் நடைமுறைப்படுத்தவில்லை.

எனவே, கர்நாடக மாநில அரசுக்கு எதிராக அனைத்து தமிழக சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கண்டன தீர்மானமும் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிறைவேற்றப்பட்டது.. தேவைப்பட்டால் உச்சநீதிமன்றம் வழக்கு தொடரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.. தமிழக அரசு இந்த வழக்கை தொடர போவதாக தெரிகிறது.

இன்று கூடுகிறது: இப்படிப்பட்ட சூழலில் காவிரி மேலாண்மை ஆணையம் இன்றைய தினம் கூடியிருக்கிறது.. டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் இன்று பிற்பகல் இந்த கூட்டம் துவங்கி நடந்து வருகிறது.

இந்த கூட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுவை மாநிலங்களுக்கு ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் அனைத்து மாநில அதிகாரிகளுமே இதில் பங்கேற்றுள்ளனர்.. தண்ணீர் திறப்பு குறித்து தமிழக, கர்நாடக அதிகாரிகள் இந்த கூட்டத்தில் தங்கள் கருத்தையும் பதிவு செய்து வருகிறார்கள்.

டிஎம்சி தண்ணீர்: தமிழக அரசு சார்பில் காவிரி ஒழுங்காற்று குழு அறிவுறுத்தலின்படி, கர்நாடக அரசு தினமும் ஒரு டிஎம்சி தண்ணீர் திறந்துவிடல்லை என்பதால், அதை உடனடியாக திறந்து விட ஆணையிடும்படி, இந்த கூட்டத்தில் வலியுறுத்தி வருவதாக தெரிகிறது..
மொத்தத்தில்,தண்ணீர் திறப்பு குறித்து தமிழக, கர்நாடக அதிகாரிகள் தங்கள் கருத்துக்களை பேசிவருவதால், இன்றைய தினம் தலைநகரில் நடந்துவரும் இக்கூட்டம் மிகுந்த முக்கியத்தை தமிழகம், கர்நாடக, கேரள மாநிலங்களில் ஏற்படுத்தி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+