நீதிபதிகள் பற்றிய அவதூறு கருத்து... ஐந்து பேரை வரிசையாக கைது செய்த சிபிஐ.. அதிரடி நடவடிக்கை
டெல்லி: ஆந்திர உயர் நீதிமன்ற நீதிபதிகள் குறித்து வேண்டுமென்றே அவதூறு பரப்பும் வகையில் கருத்துகளை வெளியிட்ட குற்றச்சாட்டில் இதுவரை ஐந்து பேரை சிபிஐ கைது செய்துள்ளனர்.
ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதிகள் சிலர் அவதூறு பரப்பும் வகையில் கருத்துகளைப் பதிவிட்டதாகப் புகார் எழுந்தது. இந்த வழக்கில் இன்று இரண்டு பேரை சிபிஐ கைது செய்துள்ளது.

இந்த வழக்கில் எஃப்ஐஆரில் மொத்தம் 16 பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. அவர்களின் ஐபி முகவரியை வைத்து 13 பேரின் இருப்பிடங்களை சிபிஐ கண்டறிந்தது. அதில் மூன்று பேர் வெளிநாட்டில் இருப்பதும் தெரியவந்துள்ளது.
இதுவரை இந்த வழக்கில் மொத்தம் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக ஜூலை 28ஆம் தேதி தமி ரெட்டி கொண்டா ரெட்டி மற்றும் பமுலா சுதீர் ஆகியோரை கைது சிபிஐ கைது செய்தது
அதேபோல குவைத்தில் இருந்த நாடு திரும்பிய லிங்கரெட்டி ராஜசேகர் ரெட்டி என்பவரையும் கடந்த ஜூலை 9ஆம் தேதி சிபிஐ கைது செய்தனர். இந்த வழக்கில் ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 2 எம்பிகளும் தொடர்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில் எஃப்ஐஆரில் இடம் பெறாத சிலர் குறித்து விசாரித்து வருவதாக சிபிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
முன்னதாக ஜார்கண்ட் நீதிபதி கொலை செய்யப்பட்டது குறித்த வழக்கு விசாரணையில், கீழமை நீதிபதிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் புலனாய்வு அமைப்புகள் சரியான நடவடிக்கைகளை எடுப்பதில்லை என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா அதிருப்தி தெரிவித்திருந்தார்.
இந்தச் சூழலில்தான் தற்போது சிபிஐ தனது நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications