டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அடேங்கப்பா! ரூ.20 லட்சம் கொடுத்தால் பாஸ்.. அதிரவைத்த நீட் தேர்வு மோசடி - கொத்தாக தூக்கிய சிபிஐ

Google Oneindia Tamil News

டெல்லி: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வில் வெற்று பெறுவதற்கு ரூ.20 லட்சம் வசூல் செய்யப்பட்டது சிபிஐ விசாரணையில் அம்பலமாகி இருக்கிறது.

மருத்துவப் படிப்புகளுக்கு 12 ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்த நிலையில், மத்தியில் ஆட்சிக்கு வந்த பாஜக நீட் என்ற நுழைவுத்தேர்வை அறிமுகம் செய்தது.

இதற்கு தொடக்கத்திலிருந்தே தமிழக அரசியல் கட்சிகளும் மாணவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் இதனால் அனிதா தொடங்கி பல மாணவர்கள் இன்னுயிரை இழந்துள்ளனர்.

வெட்கக்கேடு.. மாணவிகளின் உள்ளாடையை கழற்ற சொல்வீர்களா? - நீட் சர்ச்சைக்கு மகளிர் ஆணையம் கொதிப்பு வெட்கக்கேடு.. மாணவிகளின் உள்ளாடையை கழற்ற சொல்வீர்களா? - நீட் சர்ச்சைக்கு மகளிர் ஆணையம் கொதிப்பு

நீட் தேர்வு விலக்கு மசோதா

நீட் தேர்வு விலக்கு மசோதா

நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்குகோரி சட்டப்பேரவையில் 2 முறை தீர்மானங்களை நிறைவேற்றியும் ஆளுநர் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பாமல் காலம் தாழ்த்தியதால் இந்த ஆண்டும் தமிழ்நாடு மாணவர்களுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு கிடைக்கவில்லை. இதனால் மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாராகி வந்தனர்.

நீட் தேர்வு

நீட் தேர்வு

இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு ஜூலை 17 ஆம் தேதி நடைபெற்றது. பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் நாடு முழுவதும் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்பட்ட நீட் தேர்வு தொடர்பாக பலவிதமான சர்ச்சைகள் எழுந்துள்ளன. இந்த நீட் தேர்வுக்காக நாடு முழுவதும் 497 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. 18,72,339 மாணவர்கள் தேர்வை எழுதினார்கள்.

 ஆள்மாறாட்ட மோசடி

ஆள்மாறாட்ட மோசடி

இது ஒருபுறமிருக்க நீட் ஆள்மாறாட்டம் மோசடிகளில் ஈடுபட்டதாக டெல்லியில் 8 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் சிபிஐ நடத்திய தீவிர விசாரணையில் அதிர வைக்கும் பல்வேறு தகவல்கள் அம்பலமாகி இருக்கின்றன. நீட் தேர்வில் தேர்ச்சியடைய விரும்பும் மாணவர்களின் பெயரில் ஆள் மாறாட்டம் செய்து தேர்ச்சி பெற வைப்பதற்காக மோசடி கும்பல் ரூ.20 லட்சம் பெற்றது தெரிய வந்திருக்கிறது.

Recommended Video

    Tamilnadu-க்கு Neet Exam விலக்கு கிடைக்குமா? | Public Opinion
     4 மாநிலங்கள்

    4 மாநிலங்கள்

    இதில் ரூ.5 லட்சம் ஆள்மாறாட்டம் செய்து தேர்வெழுதும் நபருக்கு வழங்கப்படும் என்றும் மீதம் உள்ள 15 லட்சம் ரூபாய் இடைத்தரகர்கள் மற்றும் ஆள்மாறாட்டத்துக்கு உதவியாக இருந்தவர்களுக்கு பிரித்து வழங்கப்படுவதும் உறுதியானது. இதில் டெல்லியை சேர்ந்த சுஷில் ரஞ்சன் என்பவரே இதில் மூளையாக செயல்பட்டதும், பீகார், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, அரியானா ஆகிய மாநிலங்களில் நீட் மோசடிகளில் ஈடுபட்டதும் தெரியவந்திருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    English summary
    CBI found NEET scam and Rs.20 lakh for each medical seats: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வில் வெற்று பெறுவதற்கு ரூ.20 லட்சம் வசூல் செய்யப்பட்டது சிபிஐ விசாரணையில் அம்பலமாகி இருக்கிறது.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X