அனுமதிக்காதீர்கள்.. ப. சிதம்பரம் பேச கூடாது.. அவசர அவசரமாக தடுத்த சிபிஐ.. நீதிமன்றத்தில் பரபரப்பு!

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக இன்று சிபிஐ நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் காரசார விவாதங்கள் அரங்கேறியது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அனல் பறந்த வாதங்கள்

    டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக இன்று சிபிஐ நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் காரசார விவாதங்கள் அரங்கேறியது. இதில் ப.சிதம்பரம் கூண்டில் நின்று பேசுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிபிஐ தரப்பு வாதம் செய்தது.

    ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேட்டில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கைதாகி உள்ளார். இவர் நேற்று சிபிஐ மூலம் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

    இன்று மதியம் இரண்டு மணிக்கு டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கு விசாரணை மிகவும் விறுவிறுப்பாக சென்றது. ரோஸ் அவென்யூ சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு நடைபெற்றது.

    என்ன வாதம்

    என்ன வாதம்

    இந்த வழங்கில் ப. சிதம்பரம் சார்பில் காங்கிரஸ் கட்சியின் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் மற்றும் அபிஷேக் மனு சிங்வி ஆஜரானார். அரசு சார்பில் சொலிஸ்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜர் ஆனார்.ப. சிதம்பரம் வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி தனது வாதத்தில் முக்கியமான விஷயங்களை குறிப்பிட்டார்.

    முன் ஜாமீன்

    முன் ஜாமீன்

    அதில், ப. சிதம்பரத்தின் இடைக்கால முன் ஜமீனை 7 மாதம் கழித்து ரத்து செய்தது ஏன்?. இந்திராணி முகர்ஜி வாக்குமூலம் கொடுத்து 4 மாதம் கழித்தே விசாரணை தொடங்கியது. அதன்பின்பே ப. சிதம்பரம் விசாரணைக்கு அழைக்கப்பட்டார். சிதம்பரத்திடம் கேள்வி கேட்க விரும்பினால் நீதிமன்றம் கேட்கலாம். அவர் பேச விரும்புகிறார் என்று என்று அபிஷேக் மனு சிங்வி வாதம் செய்தார்.

    கடும் வாதம்

    கடும் வாதம்

    இதை சிபிஐ தரப்பு கடுமையாக எதிர்த்து, ப. சிதம்பரத்தை கண்டிப்பாக காவலில் எடுக்க வேண்டும். முன்னாள் அமைச்சர் என்பதற்காக சலுகை தர கூடாது. சிதம்பரத்தை பேச அனுமதிக்க கூடாது. அவர் அவையில் பேச அனுமதிக்கப்பட கூடாது. அவர் சாதாரண மனிதர் இல்லை என்று சிபிஐ வாதம் செய்தது.

    கூடவே கூடாது

    கூடவே கூடாது

    இதையடுத்து குற்றம் சட்டப்பட்டவருக்கு அவரின் தரப்பை பேச வாய்ப்பு தர வேண்டும். அவர் பேசுவதற்கு முழு உரிமை இருக்கிறது. அவர் பேசினால் தவறு கிடையாது. அதை அனுமதிக்கலாம் என்று அபிஷேக் கூறினார். அதன்பின் கடைசியில் சிதம்பரம் பேச நீதிமன்றம் அனுமதி அளித்தது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+