ஓர் இரவில் நடந்த நாடகம்.. 45 நாட்கள் திக் திக் விசாரணை.. பகீர் கிளப்பிய சிபிஐ vs சிபிஐ வழக்கு!

மத்திய அரசுக்கு எதிராக சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா தொடுத்த வழக்கு மிகப்பெரிய வரலாறு கொண்டதாகும்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    மத்திய அரசுக்கு எதிரான சிபிஐ இயக்குனர் வழக்கு.. இன்று தீர்ப்பு!- வீடியோ

    டெல்லி: மத்திய அரசுக்கு எதிராக சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா தொடுத்த வழக்கு மிகப்பெரிய வரலாறு கொண்டதாகும்.

    மத்திய அரசு கடந்த அக்டோபர் 23ம் தேதி சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா, சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா இருவரும் கட்டாய விடுப்பில் செல்ல உத்தரவு பிறப்பித்தது. சிபிஐ அமைப்பில் ஏற்பட்ட மோதலை அடுத்து மத்திய அரசு இந்த உத்தரவை பிறப்பித்தது.

    இந்த கட்டாய விடுப்பிற்கு எதிராக சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இந்த வழக்கு இந்திய அரசியலின் மிக முக்கியமான வழக்காக பார்க்கப்படுகிறது.

    எங்கு தொடக்கம்

    எங்கு தொடக்கம்

    இந்த பிரச்சனை தொடங்கியது சிபிஐ நடத்திய ஒரு ரெய்டில் இருந்துதான். குஜராத்தை சேர்ந்த இறைச்சி ஏற்றுமதி செய்து வந்த தொழிலதிபர் மொயின் குரேஷியின் வீட்டுல் சிபிஐ ரெய்டு நடத்தியது. இதில் அவர் பண மோசடி மற்றும் வரி மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவர் மீதான வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில்தான் சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா சிக்கினார்.

    எப்படி சிக்கினார்

    எப்படி சிக்கினார்

    மொயின் குரேஷியின் வழக்கில் தொடர்புடைய நபர்களை விடுவிக்க சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டை வைத்ததே சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மாதான். இதனால் சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா மீது சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மாவின் உத்தரவின் பேரில் சிபிஐ அமைப்பு வழக்கு பதிவு செய்து விசாரித்தது. அதாவது சிபிஐ மீது சிபிஐ வழக்கு பதவி செய்தது.

    வேறு புகார்

    வேறு புகார்

    இதனால் கோபம் அடைந்த அஸ்தானா, அலோக் வெர்மாவிற்கு எதிராக களமிறங்கினார். அலோக் வெர்மா மீது ராகேஷ் அஸ்தானா ஊழல் லஞ்ச புகார் அளித்தார். லாலு பிரசாத் வழக்கில் லஞ்சம் வாங்கியதாக குறிப்பிட்டார். இதனால் சிபிஐ அமைப்பிற்குள் அதிகார மோதல் ஏற்பட்டது.

    ரெய்டு நடத்தியது

    ரெய்டு நடத்தியது

    சிபிஐ மீது சிபிஐ வழக்கு பதிந்து, சிபிஐ அலுவலகத்திலேயே சோதனை செய்தது. இரண்டு முறை இந்த சோதனையின் நடந்தது. சிபிஐ அலுவலகத்திற்குள் செல்ல சில சிபிஐ இயக்குநர்களுக்கே அனுமதி மறுக்கப்பட்டது. இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

    கட்டாய விடுப்பு

    கட்டாய விடுப்பு

    இதனால், மத்திய அரசு கடந்த அக்டோபர் 23ம் தேதி சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா, சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா இருவரும் கட்டாய விடுப்பில் செல்ல உத்தரவு பிறப்பித்தது. அதோடு சிபிஐ உயரதிகாரிகள் பலரை இடமாற்றம் செய்தது. அதுவரை நாகேஸ்வர் ராவ் சிபிஐ பொறுப்பு இயக்குனராக செயல்படுவார் என்றது.

    வழக்கு தொடுத்தார்

    வழக்கு தொடுத்தார்

    இந்த கட்டாய விடுப்பிற்கு எதிராக இயக்குனர் அலோக் வெர்மா தொடுத்தார். இந்த வழக்குதான் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மொத்தம் 45 நாட்கள் இந்த வழக்கு விசாரணை நடந்தது. சிபிஐ அதிகாரிகள் தொடங்கி மத்திய அரசின் அதிகார வரம்பு வரை பல விஷயங்கள் இதில் விசாரிக்கப்பட்டது.

    கமிட்டி அறிவிக்கை

    கமிட்டி அறிவிக்கை

    உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் இதற்காக விசாரணை கமிட்டி அமைத்தார். அலோக் வெர்மாவிற்கு எதிராக அஸ்தானா வைக்கும் புகார்கள் உண்மையா, மத்திய அரசின் நடவடிக்கை சரியா என்று அறிக்கை தாக்கல் செய்ய கூறினார். விஜிலென்ஸ் கமிஷன் உறுப்பினர்களை கொண்ட விசாரணை கமிட்டியை அமைத்தார். இவர்கள் வழங்கிய விசாரணை அறிக்கையை முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஏகே பட்நாயக் சோதனை செய்தார்.

    பரபரப்பான அறிக்கை

    பரபரப்பான அறிக்கை

    இந்த அறிக்கையும் ஒரு விதத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.இதில் அலோக் வெர்மாவிற்கு சாதகமாகவும், எதிராகவும், நடுநிலையாகவும் நிறைய கருத்துக்கள் இருப்பதாக நீதிபதிகள் கூறினார்கள். இந்த விஜிலன்ஸ் அறிக்கை கடந்த நவம்பர் 12ம் தேதி உச்சநீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது.

    தொடர் விசாரணை

    தொடர் விசாரணை

    இந்த விசாரணை அறிக்கை மீதான பதில் மனுவை சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா தாக்கல் செய்தார். அதன்பின் நான்கு முறை நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடந்தது. கடந்த டிசம்பர் 6ம் தேதி இதில் விசாரணை முடிந்தது. அதன்பின் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டு, இன்று தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+