Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

CBSE: மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சிபிஎஸ்இ! விடைத்தாள் நகல் பெற விண்ணப்பிக்கலாம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: CBSE 10 ஆம் வகுப்பு மாணவர்கள் வரும் மே 21 முதல் விடைத்தாள் நகல்களைப் பெற விண்ணப்பிக்கலாம். சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு மாணவர்கள் மே 27 முதல் விடைத்தாள் நகல்களை பெற பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள சிபிஎஸ்இ மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், கடந்த மே 13 ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. நாடு முழுவதும் நடைபெற்ற சிபிஎஸ்இ தேர்வில் 10 ஆம் வகுப்பில் 93.66% தேர்ச்சியும், 12 ஆம் வகுப்பில் 88.39% தேர்ச்சியும் பெற்றனர்.

CBSE Post-Result Schedule Class 10 Answer Sheet Applications from May 21 Class 12 from May 27

சிபிஎஸ்இ மறு மதிப்பீடு செயல்முறை

மேலும், சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் 2025க்கான தேர்வு முடிவுகளுக்குப் பிந்தைய நடவடிக்கைகளின் வரிசையை சிபிஎஸ்இ தேர்வு வாரியம் திருத்தியுள்ளது. புதிய நடைமுறையின் கீழ், மாணவர்கள் இப்போது முதலில் தங்களது மதிப்பீடு செய்யப்பட்ட விடைத்தாள்களின் நகலைப் பெற வேண்டும். இதன் மூலம் அவர்கள் தங்கள் பதில்களையும், வழங்கப்பட்ட மதிப்பெண்களையும் மதிப்பாய்வு செய்ய முடியும்.

இதன் அடிப்படையில், அவர்கள் குறிப்பிட்ட பதில்களின் மதிப்பெண் சரிபார்ப்பு அல்லது மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம் அல்லது ஒருசேர இரண்டையும் செய்யலாம். இதற்கு முன்பு, மதிப்பெண் சரிபார்ப்பு, விடைத்தாள் நகல் பெறுதல், விடைகளை மறு மதிப்பீடு செய்தல் என்ற நடைமுறை இருந்தது.

ஏன் இந்த மாற்றம்?

மதிப்பீடு பிழைகள் இல்லாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக சி.பி.எஸ்.இ வாரியம் இந்த முறையை திருத்தியுள்ளது. "பல நடவடிக்கைகள் எடுத்த பிறகும், சில தவறுகள் கவனிக்கப்படாமல் இருக்க வாய்ப்பு உள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், மாணவர்கள் தங்கள் விடைத்தாள்களைப் பார்த்து, தவறை வாரியத்திடம் தெரிவிக்க CBSE ஒரு வாய்ப்பை வழங்குகிறது.

"இந்த மாற்றம் மாணவர்களுக்கு அவர்களின் தேர்வு முடிவுகளில் அதிக வெளிப்படைத்தன்மையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, இது அவர்களின் செயல்திறனை நன்கு புரிந்துகொள்ளவும் மதிப்பீட்டு செயல்பாட்டில் உள்ள பிழைகளை சவால் செய்யவும் அனுமதிக்கிறது" என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

புதிய செயல்முறை

புதிய செயல்முறையின்படி,
1. முதல் கட்டத்தில், மாணவர்கள் விரும்பிய பாடங்களின் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாளை கோரலாம்.
2. இரண்டாம் கட்டத்தில், மாணவர்கள் பின்வருவனவற்றிற்கு விண்ணப்பிக்கலாம்:
(அ) ​​மதிப்பெண்கள் சரிபார்ப்பு
(ஆ) மறு மதிப்பீடு
(இ) மதிப்பெண்கள் சரிபார்ப்பு மற்றும் மறு மதிப்பீடு இரண்டும்.

மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் முதலில் சிபிஎஸ்இ வாரியத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் சென்று தங்கள் விடைத்தாளின் நகலைப் பெற வேண்டும். தங்கள் விடைத்தாள்களைச் சரிபார்த்த பிறகு, மறுமதிப்பீட்டு செயல்முறைக்கு விண்ணப்பிக்க விரும்பினால், அவர்கள் அதற்குப் பதிவு செய்ய வேண்டும். ஒரு பாடத்துக்கு ரூ.100 கட்டணம் வசூலிக்கப்படும்.

விடைத்தாள் நகல் பெற விண்ணப்பிக்க

சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு மாணவர்கள் மே 21 ஆம் தேதி முதல் நகல்களைப் பெற விண்ணப்பிக்கலாம். 12 ஆம் வகுப்பு மாணவர்கள் மே 27 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். ஸ்கேன் செய்யப்பட்ட நகல்களைப் பெற, மாணவர்கள் ஒரு பாடத்திற்கு ரூ.700 செலுத்த வேண்டும். 10 ஆம் வகுப்புக்கான மதிப்பெண் சரிபார்ப்பு மே 28 ஆம் தேதி தொடங்கும், 12 ஆம் வகுப்புக்கான மதிப்பெண் சரிபார்ப்பு ஜூன் 3 ஆம் தேதி தொடங்கும்.

"மறுமதிப்பீடு, மறு கூட்டலில் மதிப்பெண்களில் மாற்றம் ஏற்பட்டால், அதாவது மதிப்பெண் அதிகரித்தாலோ, அல்லது குறைந்தாலோ அத்தகைய விண்ணப்பதாரர்கள் தங்களிடம் உள்ள மார்க்‌ ஷீட்டை ஒப்படைக்க வேண்டும். அதன் பிறகு, அவர்களுக்கு புதிய மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்," என்று வாரியம் தெரிவித்துள்ளது.

துணைத் தேர்வுகள்

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளில் 1 அல்லது 2 பாடங்களில் தேர்ச்சி பெறாத மாணவர்கள், சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு துணைத் தேர்வு 2025 இல் பங்கேற்க தகுதியுடையவர்கள் ஆவார்கள். சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு துணைத் தேர்வு 2025க்கான கால அட்டவணை அதிகாரப்பூர்வ வலைத்தளமான cbse.gov.in இல் வெளியிடப்படும்.

சிபிஎஸ்இ, துணைத் தேர்வில் தேர்ச்சி பெற மாணவர்களுக்கு மூன்று வாய்ப்புகளை வழங்குகிறது. முதல் முயற்சி ஜூலையில் நடைபெறும். இரண்டாவது முயற்சி அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரலில் நடைபெறும். அதே நேரத்தில் மூன்றாவது முயற்சி அடுத்த ஜூலை அல்லது ஆகஸ்டில் மீண்டும் நடத்தப்படும். எனவே, சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் துணைத் தேர்வுக்கு தயாராகுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+