ஹிஸ்ப் உத் தஹிரி அமைப்பினை பயங்கரவாத அமைப்பாக மத்திய அரசு அறிவிப்பு
டெல்லி: ஹிஸ்ப் உத் தஹிரி அமைப்பினை பயங்கரவாத அமைப்பாக மத்திய அரசு அறிவித்து அதனை தடை செய்துள்ளது. உலக நாடுகள் பல இந்த ஹிஸ்ப் உத் தஹிரி அமைப்புக்கு தடை செய்யப்பட்டுள்ளது.
உலக நாடுகள் பலவற்றில் ஹிஸ்ப் உத் தஹிரி அமைப்பு பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டு அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது இந்தியாவிலும் ஹிஸ்ப் உத் தஹிரி அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹிஸ்ப் உத் தஹிரி அமைப்பினை பயங்கரவாத அமைப்பாக மத்திய உள்துறை அறிவித்து அதனை தடை செய்துள்ளது.

தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தமிழகத்தை சேர்ந்த 9 பேர் மற்றும் பெங்களூரை சேர்ந்த ஒருவர் என 10 பேரை கைது செய்திருந்தனர். தமிழகத்தின் சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த டாக்டர் ஹமீர் முசீன், அவரது தந்தை மன்சூர், சகோதரர் அப்துல் ரகுமான், அவரது நண்பர்களான முகமது மாரீஸ், காதர் நவாஸ் செரீன், அகமது அலி, மைசூர் ரகுமான், தஞ்சையை சேர்ந்த முஷ்பூர் ரகுமான், அல்தாப் தாஹிப் மற்றும் பெங்களூர் விமான நிலையத்தில் அஜய் அகமது ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
கைது செய்யப்பட்ட 10 பேரிடமும் தேசிய புலானய்வு முகமை அதிகாரிகள் போலீஸ் கஸ்டடியில் வைத்து ஐந்து ஐந்து நாட்களாக இருமுறை விசாரணை நடத்தினர். இதில் பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியானதாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் ஹிஸ்ப் உத் தஹிரி அமைப்பில் இருந்து கொண்டு இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டனர் என்றும் காஷ்மீரில் உள்ள பாகிஸ்தான் ராணுவத்தின் உதவியை நாடியிருப்பதும் தெரியவந்தது.
மேலும் பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட அமைப்புடனும் இவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களுக்கு சொந்தமான இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். இதில் பல்வேறு ஆவணங்கள் கிடைத்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் இந்த ஆவணங்களில் உலகத்தில் தடை செய்யப்பட்ட ஹிஸ்ப் உத் தஹிரி அமைப்பில் இருந்ததும், பாகிஸ்தானில் இருக்கும் சிலடரிடம் உதவி கேட்டதும், அதாவது காஷ்மீரை பாகிஸ்தானுடன் சேர்க்கும் படி உதவி கேட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் ஹிஸ்ப் உத் தஹிரி அமைப்பினை மத்திய அரசு பயங்கரவாத அமைப்பாக அறிவித்து அதனை பிரகனடப்படுத்தி உள்ளது. தற்போது இது தொடர்பான அறிக்கையினை மத்திய அரசு அறிவித்துள்ளது.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்!












Click it and Unblock the Notifications