அரசு ஊழியர்களுக்கு சூப்பர் ஜாக்பாட்.. இதோ அறிவிப்பு.. புரமோஷன் வேற.. யாரெல்லாம் கன்ஃபார்ம் தெரியுமா
டெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது.. அதுகுறித்து அறிவிப்பும் ஒன்றும் அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது.
நாட்டில் உள்ள 47.58 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 69.76 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி மற்றும் அகவிலைப்படி நிவாரணம் ஆண்டுக்கு 2 முறை அதாவது ஜனவரி முதல் ஜுன் மற்றும் ஜூலை முதல் டிசம்பர் மாதங்களுக்கு உயர்த்தி அளிக்கப்பட்டு வருகிறது.

மத்திய அரசு: மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ எனப்படும் அகவிலைப்படி நிலுவைத்தொகையை அனுப்புவதுடன், இந்த மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 4 சதவீதம் உயரும் வாய்ப்புகள் உள்ளதாக தொடர்ந்து தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
ஜூலை மாதத்தில் நாட்டின் சில்லறை பணவீக்கம் 15 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதால், அரசாங்கம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய அறிக்கையின்படி, அகவிலைப்படி (DA) 3 சதவீத புள்ளிகள் 45 ஆக உயர்ந்துள்ளது.. இந்த உயர்வு ஜூலை 1, 2023 முதல் அமலுக்கு வந்ததாகவே கருதப்படும்..
நிவாரணம்: அந்தவகையில், மத்திய அரசு தரப்பிடமிருந்து டிஏ என்று சொல்லப்படும் அகவிலைப்படி உயர்வு மற்றும் டிஆர் என்று சொல்லப்படும் அகவிலை நிவாரணம் செப்டம்பர் மாதம் உயர்த்தி மத்திய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை என்றாலும், விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, பதவி உயர்வுக்கான அறிவிப்பும், அதற்கான விதிமுறைகளில் மாற்றங்களும் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகவிலைப்படி: ஆம், 7வது ஊதியக்குழுவின்படி மத்திய அமைச்சகம் பாதுகாப்பு சிவில் ஊழியர்களின் பதவி உயர்வுக்கு தேவையான, குறைந்தபட்ச தகுதிச் சேவையின் விதிமுறைகளை திருத்தம் செய்யப்பட்டுள்ளது.. அதன்படி, 7வது ஊதியக் குழுவின் சம்பள மேட்ரிக்ஸ் மற்றும் ஊதிய உயர்வுகள் பாதுகாப்பு சிவில் ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதில், அமைச்சகத்தின் பாதுகாப்பு துறையை சேர்ந்த ஊழியர்களுக்கான புரமோஷன்கள் வரப்போகின்றன.. அவர்களுக்கான ஊழியர்களுக்கான் பதவி உயர்வு தகுதி குறித்த புதிய விதிமுறைகளை பாதுகாப்பு அமைச்சகம்/பாதுகாப்புத்துறை வெப்சைட்டிலும் பதிவேற்றப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக, மத்திய அரசின் அனைத்து துறை ஊழியர்களுக்கும் அகவிலைப்படி, பதவி உயர்வு போன்றவை குறித்து, அறிவிப்புகள் நேரத்தில் வெளியிடப்படும்.. ஆனால், இந்த பாதுகாப்பு அமைச்சகத்திற்கான ஊழியர்களுக்கான அறிவிப்புகள் மட்டும் எப்போதுமே தனியாக அறிவிக்கப்படும்.
மகிழ்ச்சி: அந்தவகையில், பாதுகாப்பு அமைச்சக ஊழியர்களின் பதவி உயர்வுக்கான தகுதி விதிமுறைகளில் மாற்றங்களை செய்துள்ளதும், ஊழியர்களின் குறைந்தபட்ச தகுதி சேவையின் மாற்றம் காரணமாக பலரும் பதவி உயர்வு பெறுவதற்கான வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதும், மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சக ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications