ஜஸ்ட் ஒரே மாசம் போல.. அரசு ஊழியர்களுக்கு விரைவில் வருதா ஜாக்பாட்.. வெளியான முக்கிய தகவலை பாருங்க
டெல்லி: மத்திய அரசின் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் எப்போது வழங்கப்படும் என்பது குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
நாட்டில் உள்ள 47.58 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 69.76 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி மற்றும் அகவிலைப்படி நிவாரணம் ஆண்டுக்கு 2 முறை அதாவது ஜனவரி முதல் ஜுன் மற்றும் ஜூலை முதல் டிசம்பர் மாதங்களுக்கு உயர்த்தி அளிக்கப்பட்டு வருகிறது.
மத்திய அரசு: மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ எனப்படும் அகவிலைப்படி நிலுவைத்தொகையை அனுப்புவதுடன், இந்த மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 4 சதவீதம் உயரும் வாய்ப்புகள் உள்ளதாக தொடர்ந்து தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

இதன்காரணமாக, அடிப்படை சம்பளத்தை உரிய முறையில் அதிகரிக்க முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.. அதாவது 42 சதவீதம் அகவிலைப்படி வாங்குபவர்கள், இனிமேல் 46 சதவீதம் வாங்கக்கூடும் என்றும், அப்படியானால், 26 ஆயிரம் ரூபாய் அடிப்படை வருமானம் வாங்கும் நபர்களுக்கு, 11,960 ரூபாய் வரை அகவிலைப்படி உயர்வு இருக்கக்கூடும் என்றும் சொல்லப்பட்டு வருகிறது..
பொதுவாக, அகவிலைப்படி கணக்கீடு என்பது, அடிப்படை சம்பளத்திலிருந்துதான் செய்யப்படுகிறது... ஒரு ஊழியரின் அடிப்படை சம்பளம் ரூ.20,000 எனில், அகவிலைப்படியில் மட்டுமே கணக்கிடப்படும்.. அகவிலைப்படியில் 4% உயர்வு இருந்தால், ஊழியரின் சம்பளம் மாதம் சுமார் ரூ.800 ஆக அதிகரிக்கும்.
ஜூன் மாதம்: கடந்த மே மற்றும் ஜுன் மாதங்களுக்கான அனைத்திந்திய நுகர்வோர் விலை குறியீடு வெளியிடப்பட்டது. அப்போது, கணிசமான அளவில் குறியீடு உயர்ந்திருந்தால், நடப்பு மாதங்களுக்கான அகவிலைப்படி 4 சதவீதங்கள் உயர்த்தப்பட்டு 46 சதவீதமாக அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதேபோல, அரிசி, கோதுமை, பருப்பு, கோழி, முட்டை, பழங்கள் போன்ற பொருள்கள் குறியீட்டின் உயர்வுக்கு காரணம் என்றும் சொல்கின்றனர்.. எனினும் எப்படிப்பார்த்தாலும், அகவிலைப்படி உயர்வுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்பதால், அரசு ஊழியர்கள் தெம்பாக உள்ளனர்.
ஜூலை மாதம்: இந்நிலையியல், ஜூலை மாதத்தில் நாட்டின் சில்லறை பணவீக்கம் 15 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதால், அரசாங்கம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய அறிக்கையின்படி, அகவிலைப்படி (DA) 3 சதவீத புள்ளிகள் 45 ஆக உயர்ந்துள்ளது.. இந்த உயர்வு ஜூலை 1, 2023 முதல் அமலுக்கு வந்ததாகவே கருதப்படும்..
நிவாரணம்: அந்தவகையில், மத்திய அரசு தரப்பிடமிருந்து டிஏ என்று சொல்லப்படும் அகவிலைப்படி உயர்வு மற்றும் டிஆர் என்று சொல்லப்படும் அகவிலை நிவாரணம் செப்டம்பர் மாதம் உயர்த்தி மத்திய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனினும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.
ஜனவரி முதல் ஜூன் வரை வெளியிடப்பட்ட AICPI (All India Consumer Price Index ) தரவுகளின்படி, இந்த முறை அகவிலைப்படி (டிஏ) மற்றும் அகவிலை நிவாரணம் (டிஆர்) 4 சதவீதம் அதிகரிக்கப்படலாம் என்றும், மத்திய அரசு அகவிலைப்படியை (டிஏ) 4 அல்லது 3 சதவீதம் உயர்த்தப்படலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இருந்தாலும், இறுதி முடிவு மத்திய அரசிடம் உள்ளதால், தனக்கேற்பவே அதிகரிப்பை அரசு அறிவிக்கக்கூடும்..
அதுமட்டுமல்லாமல் இந்த பணத்தை அரசு ஊழியர்களின் கணக்கிலேயே நேரடியாக செலுத்தப்போகிறதாம். 1 கோடிக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அடுத்த சுற்று DA மற்றும் DR உயர்வால் பயனடைவார்கள் என்று சொல்லப்படும் நிலையில், செப்டம்பர் மாதமே டிஏ உயர்வதாக தகவல் கசிந்து வருவது, அரசு ஊழியர்களுக்கு புதிய உற்சாகத்தை தந்து வருகிறது.
சூப்பர் அதிரடி: இதற்கு இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது. தீபாவளி பண்டிகை வருவதால், அதற்கு முன்பேயே இப்படியான இன்ப அதிர்ச்சியை ஊழியர்களுக்கு மத்திய அரசு தரலாம் என்கிறார்கள்.
-
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்!












Click it and Unblock the Notifications