‘ஜிகாத்’? காஷ்மீரில் பதற வைக்கும் படுகொலைகள்! பாகிஸ்தான் தான் காரணம்! பரபர குற்றம் சாட்டும் இந்தியா!
டெல்லி : காஷ்மீரில் திட்டமிட்டு நடத்தப்பட்டு வரும் படுகொலைகளுக்கு பாகிஸ்தான் காரணம் என மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ள நிலையில், காஷ்மீரில் வன்முறை அளவுகள் அதிகரித்திருந்தாலும், அது ஜிஹாத் அல்ல என்று ஒரு மூத்த அதிகாரி கூறியுள்ளார்.
கடந்த சில மாதங்களாகவே காஷ்மீர் பண்டிட்டுகளை குறிவைத்து தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு தாக்குதலை நடத்தி வருகின்றனர். இதனால் காஷ்மீரில் மீண்டும் பண்டிட்டுகளுக்கு எதிரான சூழல் நிலவி வருகிறது.
காஷ்மீரில் மீண்டும் குடியமர்தப்பட்டுள்ள காஷ்மீர் பண்டிட் மக்களுக்கெதிராகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டு வரும் நிலையில், தங்களுக்கு உரிய பாதுகாப்பினை வழங்கக் கோரி அவ்வின மக்கள் கடந்த சில நாட்களாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

காஷ்மீர் படுகொலை
கடந்த ஒருவாரத்தில் காஷ்மீரை மையமாகக் கொண்டு இயங்கி வரும் பயங்கரவாத குழுக்கள் அங்கு சிறுபான்மையினராக உள்ள மக்களை தொடர்ந்து குறி வைத்துக் கொலை செய்து வருகின்றனர். ஆசிரியை, வங்கி மேலாளர், பண்டிதர், தொழிலாளி என கடந்த 3 நாட்களில் மட்டும் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதனையடுத்து மாநிலம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்க மத்திய அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.

அமித் ஷா ஆலோசனை
இதனையடுத்து அங்கு சட்டம் ஒழுங்கை பராமரிப்பது, பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைநகர் டெல்லியில் முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் ராணுவ தலைமை ஜெனரல் பாண்டே, தேசிய பாதுகாப்பு செயலர் அஜீத் தோவல், காஷ்மீர் கவர்னர், காஷ்மீர் டிஜிபி உள்துறை மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள், 'ரா' மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

பாகிஸ்தான் காரணம்
இந்நிலையில் காஷ்மீரில் குறிவைக்கப்பட்டு நடத்தப்பட்டு வரும் படுகொலைகளுக்கு பாகிஸ்தானை மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து சிறுபான்மையின மக்களை வெளியேற்றாமல் பாதுகாப்பான இடத்துக்கு மட்டுமே அனுப்ப வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ள நிலையில், டெல்லி நார்த் பிளாக்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தின் போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் காஷ்மீர் பள்ளத்தாக்கில் அதிகரித்து வரும் வன்முறைக்கு பாகிஸ்தான் மீது மத்திய புலனாய்வு அமைப்புகள் மீண்டும் குற்றம் சாட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தாலிபான்கள் இல்லை
சிறுபான்மை சமூகமான காஷ்மீர் பண்டிட்டுகள் மற்றும் உள்ளூர் அல்லாதவர்களை குறிவைத்து நடந்து வரும் பல கொலைகள் காரணமாக காஷ்மீரில் வன்முறை சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கலாம், ஆனால் அது ஜிஹாத் அல்ல. இது சில அவநம்பிக்கை கொண்ட சக்திகளால் செய்யப்படுகிறது என்று மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். காஷ்மீரில் வன்முறையில் ஈடுபடுபவர்கள் பாகிஸ்தானின் எல்லைக்கு அப்பால் அமர்ந்துள்ளனர். காஷ்மீர் பள்ளத்தாக்கில் தலிபான்கள் இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும் அதிகாரிகள் அமித் ஷாவிடம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications