ஆதார் மட்டும் போதுமா? பான் எண் கட்டாயம் இல்லையா..?..2023ல் பட்ஜெட்டில் வெளியாகும் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அனைத்து விதமான பணப் பரிவர்த்தனைகளுக்கும் பான் எண் அவசியமாக மாறியுள்ள சூழலில், திடீரென பான் எண் கட்டாயம் இல்லை என அறிவிக்கும் முடிவுக்கு மத்திய அரசு வந்துள்ளதாக தெரிகிறது. அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் போது இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சில நாட்களுக்கு முன்புதான் ஆதார் அட்டையுடன் பான் எண்ணை இணைக்க மத்திய அரசு இறுதிக் காலக்கெடுவை நிர்ணயித்திருக்கும் சூழலில், இந்த தகவல் பொதுமக்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

இதனிடையே, இந்த விஷயத்தில் மக்களுக்கு இருக்கும் சந்தேகங்களை தீர்க்கும் வகையில் விரிவான விளக்கத்தை மத்திய நிதியமைச்சகம் விரைவில் அறிவிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

 இன்றியமையாததாக மாறிய பான் எண்

இன்றியமையாததாக மாறிய பான் எண்

முந்தைய காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் முக்கிய பணப்பரிவர்த்தனைக்காக பான் எண் அறிமுகப்படுத்தப்பட்டாலும், இதனை தீவிரமாக செயல்படுத்தியது பாஜக ஆட்சிக்காலத்தில் தான். வரி ஏய்ப்பு செய்பவர்களை கண்டறிவதற்காக முக்கியப் பணப் பரிவர்த்தனைகள் அனைத்துக்கும் பான் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. இவ்வளவு ஏன் வங்கிக் கணக்கு கூட பான் எண் இல்லாமல் தொடங்க முடியாது என்கிற சூழலே நிலவி வருகிறது.

ஆதார் - பான் இணைப்பு

ஆதார் - பான் இணைப்பு

இதுதவிர, அசையா சொத்துகளை விற்பனை செய்தல், ரூ.10 ஆயிரத்துக்கு மேலான நிதிப் பரிவர்த்தனைகள், வருமான வரி தாக்கல் ஆகியவற்றையும் பான் எண் இல்லாமல் செய்ய முடியாது. எனவே நாட்டில் பெரும்பாலான மக்களிடம் பான் அட்டை இருக்கிறது. மேலும், பான் எண்ணை ஆதார் அட்டையுடன் இணைக்குமாறும் மத்திய அரசு பொதுமக்களை அறிவுறுத்தி வந்தது. இதற்காக, பல கால அவகாசங்களும் வழங்கப்பட்டு வந்தன. ஆனால், இன்னும் பலர் இதை செய்யவில்லை.

இறுதிக்கெடு விதித்த வருமான வரித்துறை

இறுதிக்கெடு விதித்த வருமான வரித்துறை

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு வருமான வரித்துறை சார்பில் ஓர் அறிவிப்பு வெளியானது. அதில், 2023-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் பான் எண்ணை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. அவ்வாறு இணைக்காவிட்டால், ஏப்ரல் 1-ம் தேதியுடன் அவர்களின் பான் எண் செயல்படாது என அதிரடியாக தெரிவித்தது. இதற்கு மேல் கால அவகாசம் வழங்கப்படாது எனவும் அறிவிக்கப்பட்டது.

பான் எண் கட்டாயமில்லை?

பான் எண் கட்டாயமில்லை?

இந்த சூழலில், சில வகையான பணப் பரிமாற்றங்களுக்கும் பான் எண் அவசியமில்லை என்ற முடிவை மத்திய நிதியமைச்சகம் எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து நிதியமைச்சக உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "பெரும்பாலான வங்கிக் கணக்குகள் ஆதாருடன் இணைக்கப்பட்டுவிட்டதால் பான் எண் கட்டாயம் என்பதை நீக்கிவிடலாம் என பல்வேறு வங்கிகள் தரப்பில் இருந்து நிதியமைச்சகத்துக்கு பரிந்துரைகள் வந்து கொண்டிருக்கின்றன. வருமான வரிச் சட்டத்திலும் கூட சிலவகை பரிமாற்றங்களுக்கு பான் எண்ணுக்கு பதில் ஆதாரே போதுமானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அடுத்த பட்ஜெட் தாக்கலின் போது பான் எண் கட்டாயமில்லை என்ற அறிவிப்பை நிதியமைச்சகம் வெளியிடக்கூடும்" என அவர் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+