ஏற்கனவே ஸ்டிராங்கான சட்டங்கள் இருக்கு.. அதை ஏன் பயன்படுத்தல.. மம்தாவுக்கு பதில் அளித்த மத்திய அரசு
டெல்லி: கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் கொலை சம்பவ வழக்கு தொடர்பாக முதலமைச்சர் மம்தா பேனர்ஜி பிரதமர் நரேந்திர மோடிக்கு இரண்டாவது முறையாக கடிதம் எழுதியிருந்த நிலையில், பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கு எதிராக ஏற்கெனவே வலுவான சட்டங்களும், கடுமையான தண்டனைகளும் உள்ளன என்று மத்திய அரசு பதில் அளித்துள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் கொலை வழக்கு நாடு முழுவதும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மருத்துவருக்காக நீதி கேட்டு நாடு முழுவதும் போராட்டங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இந்த வழக்கு அரசியல் ரீதியாகவும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ், பாஜக இடையே விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

இரண்டு கட்சிகளும் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றன. வழக்கை சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு தொடர்பாகவும், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் கடுமையான தண்டனை வழங்கும் வகையில் சட்டம் இயற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பேனர்ஜி, கடந்த 22 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.
அதைத்தொடர்ந்து, இரண்டாவது முறையாக மீண்டும் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தில், "ஆகஸ்ட் 22ம் தேதி அனுப்பிய கடிதத்தை மீண்டும் நினைவுபடுத்துகிறேன். பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்கும் வகையில் சட்டம் இயற்ற வலியுறுத்தியிருந்தேன். இது போன்ற முக்கியமான பிரச்னைக்கு உங்களிடமிருந்து பதில் வரவில்லை. இருப்பினும், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சரிடமிருந்து பதில் வந்தது. ஆனால், அவர்கள் பிரச்னையின் தீவிரத்தன்மையை புரிந்துகொள்ளவில்லை.
பாலியல் வன்கொடுமை வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கும் சட்டத்தில் மேற்கு வங்க அரசு திருத்தம் செய்யவுள்ளது. இது அடுத்த வாரம் மேற்கு வங்க சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும். இதன் மூலம் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்கும். அதேபோல, கடுமையான தண்டனை வழங்கும் மத்திய சட்டத்தை, பாஜக தலைமையிலான அரசு கொண்டு வர வேண்டும்.
மாநில அரசின் நிதியில் மேற்குவங்கத்தில் 88 விரைவு சிறப்பு நீதிமன்றங்களும், 62 போக்சோ வழக்கு தொடர்பான நீதிமன்றங்களும் இயங்கி வருகின்றன. ஆனால், இந்த நீதிமன்றங்கள் இயங்கவே இல்லை என அமைச்சர் அன்னபூர்னா தேவி தெரிவித்துள்ளார். இது சரியல்ல என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அந்தக் கடிதத்துக்கு மத்திய அரசு சார்பில் பதில் அனுப்பப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தை மத்திய மகளிர் நலம் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சர் அன்னபூர்னா தேவி தனது எக்ஸ் சமூக பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தக் கடிதத்தில் கூறியுள்ளதாவது: " மேற்கு வங்கத்தில் பாலியல் வன்கொடுமை, போக்ஸோ தொடர்பான 48,600 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
பாலியல் வன்கொடுமை குற்றங்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை (போக்ஸோ) விசாரிக்கக் கூடிய 11 கூடுதல் விரைவு சிறப்பு நீதிமன்றங்களும் சரியாக செயல்படவில்லை. மேற்குவங்கத்தின் நிலைமை இப்படியுள்ள சூழ்நிலையில் இதுதொடர்பான புள்ளி விவரங்களை மம்தா தவறாகக் குறிப்பிட்டுள்ளார். விரைவு நீதிமன்றங்களின் விவகாரத்தை மம்தா மூடிமறைப்பதற்காக இப்படி கடிதம் எழுதியுள்ளார்.
பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கு எதிராக ஏற்கனவே வலிமையான சட்டங்கள் மற்றும் கடும் தண்டனைகள் உள்ளன. அதை ஏன் மம்தா பானர்ஜி மேற்குவங்கத்தில் விரைந்து அமல்படுத்தவில்லை" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே மேற்கு வங்க மாநில பாஜக இணை பொறுப்பாளர் அமித் மாளவியா தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ஏற்கனவே உள்ள சட்டங்களை ஏன் மேற்கு வங்க மாநில அரசு பயன்படுத்தவில்லை. கடிதங்கள் எழுதுவதற்குப் பதிலாக எங்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள். எங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு உங்களுக்கு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
-
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல்












Click it and Unblock the Notifications