இந்தியா வரும் 114 ரபேல் விமானங்கள்.. பெரிய தடையை தாண்டியது.. இனி பாகிஸ்தானால் வாலாட்டவே முடியாது!
டெல்லி: பாதுகாப்புத் துறையைப் பலப்படுத்தும் வகையில் மத்திய அரசு பல்வேறு கொள்முதல்களை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே ரபேல் விமானங்களை வாங்க மத்திய அரசு மிக முக்கிய ஒப்பந்தத்தைக் கொடுத்துள்ளது. ரூ.3.25 லட்சம் கோடி செலவில் 114 ரபேல் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்புதல் கொடுத்துள்ளது.
இந்தியப் பாதுகாப்புப் படையைப் பலப்படுத்தப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பாதுகாப்புத் துறையை நவீனமயமாக்கும் பணிகள் ஒரு பக்கம் நடக்கும் நிலையில், தேவையான ஆயுதங்கள், விமானங்களைக் கொள்முதல் செய்யும் நடவடிக்கைகளிலும் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இந்திய விமானப் படைக்கு 114 ரஃபேல் போர் விமானங்களை ₹3.25 லட்சம் கோடி செலவில் கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.

ரபேல் விமானங்கள்
நாட்டின் பாதுகாப்புத் துறை வரலாற்றில் இதுவரை இல்லாத மிகப் பெரிய பாதுகாப்பு கொள்முதல் இதுவாகும். ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் இத்திட்டத்திற்குத் தேவைக்கான ஒப்புதலை வழங்கியது. பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானின் விரைவில் இந்தியாவுக்கு வரும் நிலையில், அதற்கு முன்பு இந்த முடிவு எடுக்கப்பட்டது. மேக்ரான் இந்தியா வரும்போது இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.
ஒப்பந்தம் என்ன!
மத்திய அரசின் முடிவின்படி 114 ரஃபேல் விமானங்கள் பிரான்சிடமிருந்து கொள்முதல் செய்யப்படும். அதில், 18 விமானங்கள் டஸ்ஸால்ட் ஏவியேஷனிடமிருந்து நேரடியாகவும், மீதமுள்ள 96 விமானங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படவும் உள்ளன. மேலும், மேம்பட்ட ரபேல் போர் விமானத் தொழில்நுட்பப் பரிமாற்றத்தையும் இந்த ஒப்பந்தம் உள்ளடக்கியது. மேக் இன் இந்தியா திட்டத்திற்கும் இது ஊக்கமளிப்பதாக அமையும். அடுத்த கட்டமாக இந்த ஒப்பந்தம் இப்போது பிரதமரின் தலைமையிலான பாதுகாப்பு அமைச்சரவைக் குழுவுக்குச் செல்லும். அங்கு இறுதி அனுமதி அவசியம்.
ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில், ஆயுதப் படைகளுக்கான பல திட்டங்களுக்குச் சுமார் ₹3.60 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்குத் தேவைக்கான ஒப்புதலை அளித்தது. அதில் முக்கியமானது விமானப் படைக்கு ரஃபேல் வாங்கும் இந்த ஒப்பந்தம். இது தவிர AS-HAPS உள்ளிட்ட திட்டங்களுக்கும் தேவையான ஒப்புதல் வழங்கப்பட்டது.
ஏன் தேவை
இந்திய விமானப் படைக்கு ரபேல் வருகை மிகப் பெரிய சாதகமாக அமையும். விமானப்படையின் வான் ஆதிக்கத் திறனை அதிகரிக்கவும் எந்த மோதலிலும் ஆதிக்கம் செலுத்த உதவும். மேலும், பெரும்பாலான விமானங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் என்பதால் இந்தியாவில் வேலைவாய்ப்பும் இதன் மூலம் கிடைக்கும்.
ரபேல் விமானங்கள்
இப்போது உலகில் இருக்கும் அதிநவீனப் போர் விமானங்களில் ஒன்று ரபேல்.. பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் ஏவியேஷன் (Dassault Aviation) இந்த ரபேல் (Rafale) போர் விமானங்களைத் தயாரிக்கிறது. இரு என்ஜின்கள் மற்றும் டெல்டா-விங் வடிவமைப்புடன் கூடிய அதிநவீனப் பன்முகப் போர் விமானமாக ரபேல் இருக்கிறது. இது மணிக்கு 2,223 கி.மீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது.
மேலும், இந்த ரபேல் போர் விமானங்களுக்கு அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் வசதியும் இருக்கிறது. போர் சூழல்களில் ஒரே நேரத்தில் பல்வேறு இலக்குகளைத் தாக்கும் Omnirole திறனையும் இது கொண்டது. ரபேல் வருகை இந்திய விமானப் படைக்கு பலத்தைக் கொடுக்கும் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை.!
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications