20 லட்சம் மொபைல் எண்களுக்கும் ஆபத்து! 20,000 மொபைல்கள் முடக்கம்.. மத்திய அரசு அதிரடி! என்ன மேட்டர்
டெல்லி: நாடு முழுவதும் 28,200 மொபைல்களை முடக்கியுள்ள மத்திய அரசு, 20 லட்சம் மொபைல் எண்களை மீண்டும் சரிபார்க்கவும் உத்தரவிட்டுள்ளது.
இந்த டிஜிட்டல் உலகு பல வழிகளில் நமக்கு உதவியாக இருக்கிறது. நமது வாழ்க்கையையும் இது எளிமையாக மாற்றி இருக்கிறது. ஆனால், இதில் சில பிரச்சினைகளும் இருக்கவே செய்கிறது.

அதில் முக்கியமானது சைபர் குற்றங்கள். அடையாள திருட்டு தொடங்கி நேரடியாக வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை திருடுவது வரை எல்லாமே இப்போது டிஜிட்டல் உலகில் சர்வ சாதாரணமாக நடக்கிறது. இதைத் தடுக்க மத்திய மாநில அரசுகள் தொடர்ச்சியாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
முடக்க உத்தரவு: இதுபோல நாடு முழுவதும் அதிகரித்துள்ள சைபர் குற்றங்களைத் தடுக்கும் வகையில் சுமார் 28,200 மொபைல்களை முடக்க டெலிகாம் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், 20 லட்சம் மொபைல் எண்களை மீண்டும் சரிபார்க்கப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அதவது அந்த நம்பர்களுக்கு மீண்டும் KYC செய்ய வேண்டும். அதில் எதாவது தவறு கண்டறியப்பட்டால் 20 லட்சம் மொபைல் எண்களை நிரந்தரமாகத் துண்டிக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
நாட்டில் அதிகரிக்கும் சைபர் குற்றங்களைத் தடுக்கும் வகையில் , தொலைத்தொடர்புத் துறை, உள்துறை அமைச்சகம் மற்றும் மாநில போலீசார் இணைந்து இந்த நடவடிக்கையை எடுத்துள்ளன. டிஜிட்டல் குற்றங்களைத் தடுக்கவும் பொதுமக்களைப் பாதுகாக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அறிவிப்பு: இது தொடர்பாகத் தகவல் தொடர்பு அமைச்சகம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "உள்துறை அமைச்சகம் மற்றும் போலீசார் இணைந்து நடத்திய ஆய்வில் சைபர் குற்றங்களுக்கு தவறாகப் பயன்படுத்தப்பட்ட 28,200 மொபைல்கள் அடையாளம் கண்டுள்ளன. மேலும், 20 லட்சம் எண்கள் சைபர் குற்றங்களில் ஈடுபட்டதும் தெரிய வருகிறது. அந்த 20 லட்சம் மொபைல் எண்களை டெலிகாம் நிறுவனங்கள் உடனடியாக சரிபார்க்க வேண்டும்.. அப்போது அதில் தவறு எதாவது கண்டறியப்பட்டால் அதை நிரந்தரமாக முடக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ள்ளது.
முதல்முறை இல்லை: மத்திய அரசு இதுபோன்ற நடவடிக்கையை எடுப்பது இது முதல்முறை இல்லை. சைபர் குற்றங்களை தடுக்க தொடர்ச்சியாக மத்திய அரசு இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்து வந்துள்ளது. இதேபோலத் தான் சில மாதங்களுக்கு முன்பு, இணையக் குற்றம் மற்றும் ஆன்லைன் நிதி மோசடிகளில் தடுக்க டிஜிட்டல் நுண்ணறிவு தளத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications