உச்சக்கட்ட போர் பதற்றம்.. தேவையின்றி ஈராக்கிற்கு செல்ல வேண்டாம்.. மத்திய அரசு எச்சரிக்கை!
Recommended Video
டெல்லி: போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியிருப்பதால் இந்தியர்கள் யாரும் ஈராக்கிற்கு தேவையின்றி செல்ல வேண்டாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க ராணுவம் நடத்திய வான்தாக்குதலில் ஈரான் நாட்டு ராணுவ தளபதி காசிம் சுலைமானி அண்மையில் கொல்லப்பட்டார். காசிம் சுலைமானி கொல்லப்பட்டதுதான் அரசு அமெரிக்கா மீது கடும் கோபத்தில் உள்ளது.
ஈரான் மக்களும் அமெரிக்காவுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனால் ஈரான் அமெரிக்கா இடையே போர் உருவாகும் சூழல் நிலவி வருகிறது.

ஏவுகணை தாக்குதல்
இந்த நிலையில், ஈராக்கின் அல் அசாத் பகுதியில் இருந்த அமெரிக்க படைதளத்தின் மீது ஈரான் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. 10-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியது.

80 பேர் பலி?
தாக்குதல் நடத்தப்பட்டதை அமெரிக்காவும் உறுதி செய்துள்ளது. ஈரானின் ஏவுகணை தாக்குதலில் அமெரிக்கப் படையை சேர்ந்த 80பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈராக் செல்ல வேண்டாம்
இதனால் அமெரிக்க எந்நேரமும் போர்த்தொடுக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தேவையின்றி ஈராக்கிற்கு செல்ல வேண்டாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

எச்சரிக்கையாக இருங்கள்
இதுதொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் ஈராக்கில் வசிக்கும் இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

முடிந்தளவு தவிருங்கள்
அத்தியாவசிய தேவையின்றி ஈராக்கிற்குள் பயணிப்பதைத் இந்தியர்கள் தவிர்க்க வேண்டும். முடிந்தளவுக்கு ஈராக் நாட்டுக்கு செல்வதை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும்.

தேவையான உதவிகள்
பாக்தாத்தில் உள்ள இந்திய தூதரகம் தொடர்ந்து இயங்கும். ஈராக்கில் உள்ள இந்தியர்களுக்கு பாக்தாத் மற்றும் எர்பில் ஆகிய பகுதிகளில் உள்ள தூதரகங்கள் தேவையான உதவிகளை செய்வதாகவும் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

விமானங்கள் செல்ல வேண்டாம்
மேலும் ஈரான், ஈராக் வாளைகுடா வான் பகுதியில் இந்திய விமானங்கள் செல்ல வேண்டாம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஈரான், ஈராக், ஓமன் வளைகுடா மற்றும் பாரசீக வளைகுடாவின் வான் வெளி குறித்து இந்திய விமான நிறுவனங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கியத்துவம் மிகுந்தது
வான்வெளியில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் சிவில் ஏவியேஷன் இயக்குனரகம் அறிவுறுத்தியிருக்கிறது. அமெரிக்க - ஈரான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் மத்திய அரசின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் மிகுந்ததாக பார்க்கப்படுகிறது.
-
ஹார்முஸ் நீரிணைக்கு சுங்க கட்டணமா? மொத்த அரபு நாடுகளும் க்ளோஸ்.. அமெரிக்கா சீரியஸ் வார்னிங்! -
ஈரான் பந்தர் அப்பாஸில் அமெரிக்க தாக்குதல்.. வேலையை காட்டிய டிரம்ப்.. அப்போ அமைதி எல்லாம் கனவுதான் -
'ஓமன்'ஐயும் தகர்த்துவிடுவேன்.. நட்பு நாடு என்றும் பாராமல் மிரட்டிய டிரம்ப்! மத்திய கிழக்கில் டென்ஷன் -
நள்ளிரவில் பாய்ந்த அமெரிக்க ஏவுகணைகள்... அதிகாலையில் திருப்பி அடித்த ஈரான்! மீண்டும் வெடிக்கும் போர் -
குவைத்தில் தாக்குதல்.. புகுந்து அடித்த அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்த ஈரான்.. உச்சகட்ட பதற்றத்தில் வளைகுடா! -
ஆடிப்போன டிரம்ப்.. ஈரான் நினைத்தால்.. 1 வாரத்தில் 10 அணு ஆயுதங்கள் ரெடியாகும்.. வெளியான பரபர தகவல்! -
மாட்டிக்கிட்ட பங்கு.. டிரம்ப்-ன் கழுத்தை நெறிக்கும் ஈரான்.. தேவையில்லாமல் இறங்கிவிட்டோம் புலம்பும் USA!! -
குட்டையை குழப்பும் இஸ்ரேல்.. ஈரானிடம் கெஞ்சும் டிரம்ப் அரசு.. இறுதிக்கட்டத்தில் போர்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா?












Click it and Unblock the Notifications