டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அடுத்தடுத்த அதிரடி.. மத்திய அமைச்சரவையில் விரைவில் மாற்றமா.. பிரதமர் - அமித்ஷா தீவிர ஆலோசனை

மத்திய அமைச்சரவையில் மாற்றம் வரலாம் என்று கூறப்படுகிறது

Google Oneindia Tamil News

டெல்லி: பீகார் சட்டசபை தேர்தமல் முடிவுகள் நாளை வெளியாக உள்ள நிலையில், மத்திய அமைச்சரவை, இம்மாத இறுதிக்குள் மாற்றம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. இது தொடர்பாக, பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், தீவிர ஆலோசனையும் நடத்தி உள்ளனர்.

நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருவது பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகளைதான்.. இதில் பாஜக வெற்றி பெறுமா? ஒருவேளை தோல்வியை தழுவினால் அதை எப்படி பாஜக தலைமை எதிர்கொள்ளும், அடுத்தடுத்த மூவ்கள் என்ன என்ற எதிர்பார்ப்பும் சேர்ந்தே நிலவி வருகிறது.

Central Ministry will suffle: Bihar Assembly Election 2021

இந்நிலையில், இம்மாத இறுதிக்குள், மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிது.. இப்போதைக்கு அவையில் 10 எம்பிக்கள் உள்ள கூட்டணி கட்சிகளுக்கு, அமைச்சரவையில், தலா ஒரு கேபினட் மற்றும் ஒரு இணை அமைச்சர் பதவி வழங்க, பிரதமர் மோடி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

சிவசேனா, அகாலிதளம் விலகலை சரிக்கட்டுவதற்காகவே புதிதாக சில கட்சிகளை கூட்டணியில் இணைக்க, பிரதமர் விரும்புகிறார்.. அதற்கான பொறுப்பும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் வழங்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் மத்திய அமைச்சரவை மாற்றம் குறித்து, பிரதமர் மோடியும், அமித்ஷாவும் ஆலோசனை நடத்தி உள்ளனர்.. இதில், ஆந்திராவில், ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி, தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய தயாராக உள்ளதாக சொல்லப்படுகிறது.. அதேபோல, அமைச்சரவையில், அதிமுகவுக்கு இந்த முறை வாய்ப்பளிக்கப்படும் என்றும் தெரிகிறது.. அதனால், இது தொடர்பாக, முதல்வர் எடப்பாடியாரிடமும் அமித்ஷா பேச உள்ளார்.

இப்போதைக்கு ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு, அமைச்சர் பதவி வழங்கப்படுவது உறுதியாகியுள்ளது... அதேபோல, பாஜக தேசிய நிர்வாகிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட சிலருக்கும், அமைச்சர் பதவி வழங்கும் திட்டம் உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

English summary
Central Ministry will suffle: Bihar Assembly Election 2021
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X