ரூ. 2.23 லட்சம் கோடி பாதுகாப்பு படை தளவாடங்களைக் கொள்முதல் செய்ய மத்திய அரசு அதிரடி ஒப்புதல்!
டெல்லி: நாட்டின் பாதுகாப்புப் படைகளின் செயல்பாட்டுத் திறன்களை மேம்படுத்த ரூ. 2.23 லட்சம் கோடி மதிப்புள்ள தளவாடங்களைக் கொள்முதல் செய்வதற்கான பரிந்துரைகளுக்கு பாதுகாப்பு தளவாட கொள்முதல் குழுமம் ஒப்புதல் அளித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு தெரிவித்துள்ளதாவது: பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு தளவாட கொள்முதல் குழுமம் ரூ.2.23 லட்சம் கோடி மதிப்புள்ள தளவாடங்களை கொள்முதல் செய்வதற்கான பரிந்துரைக்கு 2023, நவம்பர் 30 அன்று ஒப்புதல் அளித்தது. இதில் ரூ.2.20 லட்சம் கோடி மதிப்பிலான தளவாடங்கள் உள்நாட்டு தொழில் நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படும். 'தற்சார்பு இந்தியா' என்ற இலக்கை நோக்கிய பயணத்தையொட்டி இது பாதுகாப்புத் துறைக்கு கணிசமான ஊக்கத்தை அளிக்கும் .

டாங்கிகள், கவச வாகனங்கள் மற்றும் எதிரி வீரர்களை செயலிழக்கச் செய்யும் திறன் கொண்ட ஏரியா டெனிஷன் வெடிமருந்து (ஏ.டி.எம்) வகை -2, வகை -3 ஆகிய டாங்கி எதிர்ப்பு வெடிமருந்துகளை வாங்குவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், விமானப்படை மற்றும் ராணுவத்திற்கு இலகுரக போர் ஹெலிகாப்டர் மற்றும் இந்திய விமானப்படைக்கு இலகுரக போர் விமானம் எம்.கே 1 ஏ ஆகியவற்றை வாங்குதல் பிரிவின் கீழ் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திடமிருந்து வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த தளவாடங்களை வாங்குவது இந்திய விமானப்படைக்கு மிகப்பெரிய பலத்தை அளிக்கும் என்றாலும், உள்நாட்டுப் பாதுகாப்பு தளவாட உற்பத்தி தொழில் நிறுவனங்களிடமிருந்து வாங்குவது உள்நாட்டு திறனை ஒரு புதிய உச்சத்திற்குக் கொண்டு செல்லும். இது வெளிநாட்டு இறக்குமதியை சார்ந்திருப்பதையும் கணிசமாகக் குறைக்கும். இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications