திடீர் ஏற்றம்! இதை பண்ணாதீங்க பிளீஸ்.. கேரளாவுக்கு பறந்த முக்கிய உத்தரவு! என்ன சொல்கிறது மத்திய அரசு
டெல்லி: நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ள நிலையில், இது தொடர்பாக மத்திய அரசு முக்கிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.
சீனாவில் கடந்த 2019 இறுதியில் முதலில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. இதையடுத்து உலகெங்கும் கொரோனா வைரஸ் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது.
இந்தியாவில் கடந்த 2020ஆம் ஆண்டு முதல் அலை ஏற்பட்ட நிலையில், டெல்டா கொரோனா காரணமாகக் கடந்த 2021இல் கொரோனா 2ஆம் அலை ஏற்பட்டது.
.

கொரோனா வைரஸ்
இந்தச் சூழலில் கடந்த ஜனவரி மாதம் ஓமிக்ரான் கொரோனா காரணமாக நாடு முழுவதும் 3ஆவது கொரோனா அலை ஏற்பட்டது. ஓமிக்ரான் கொரோனா தீவிர பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்ற போதிலும், வைரஸ் பாதிப்பு மின்னல் வேகத்தில் பரவியது. இதனால் நாடு முழுக்க மருத்துவமனைகள் மீண்டும் நிரம்பின. ஓமிக்ரான் பரவ தொடங்கிய பின்னர், சில வாரங்களுக்குப் பின்னரே கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது.

புதிய ஓமிக்ரான்
இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே நாட்டில் வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. குறிப்பாக நமது அண்டை மாநிலமான கேரளாவில் வைரஸ் பாதிப்பு மிக வேகமாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிய வைரஸ் பாதிப்பு 90% வரை அதிகரித்து உள்ளது. அதேபோல பாசிட்டிவ் விகிதமும் 165 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. நாட்டில் புதிய வகை ஓமிக்ரான் XE பரவ தொடங்கி உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ள நிலையில், இந்த புதிய ஓமிக்ரான் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

முக்கிய உத்தரவு
இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "புதிய வகை கொரோனா பரவும் போது, அதைச் சமாளிக்கத் தினசரி கொரோனா பரவல் தரவுகளைப் பாதுகாப்பது முக்கியம். தரவுகளின் தொடர்ச்சியான மற்றும் விரைவான புதுப்பிப்பு, கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தில் பேருதவியாக இருக்கும். இது மட்டுமின்றி வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்த மத்திய, மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் உத்திகள் மற்றும் திட்டங்களை வரையறுக்கவும் இது உதவும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது

புதிய வகை கொரோனா
மத்திய அரசு மேலும் கூறுகையில், "கொரோனா பரவல் குறித்து நிலைமையைக் கண்காணிக்கவும் தேவையான நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் கொரோனா கேஸ்களின் தரவுகள் முக்கியம். இந்த தரவுகள் இருந்தால் மட்டுமே கொரோனா பரவல் அதிகரிக்கும் போது, சரியான நேரத்தில் கண்டறிய முடியும். புதிய வகை கொரோனாவும் தோன்ற வாய்ப்புள்ளதால் தரவுகளைத் தொடர்ந்து கண்காணிப்பது முக்கியம்" என்று கூறப்பட்டுள்ளது.

கேரள அரசு
கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி முதல் தினசரி கொரோனா குறித்த தகவல்களை மத்திய அரசுக்கு வழங்குவதை நிறுத்த கேரளா முடிவு செய்திருந்தது. இது கொரோனா கேஸ்கள், உயிரிழப்புகள் மற்றும் பாசிட்டிவ் விகிதம் ஆகியவற்றைக் கண்காணித்து தேவையான நடவடிக்கை எடுக்க உதவும் என்பதால் உடனடியாக மீண்டும் வழங்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை












Click it and Unblock the Notifications