"காங்கிரஸ் ஆளும் 4 மாநிலங்களிலிருந்து தடுப்பூசியை மடைமாற்றும் மத்திய அரசு? மே 1 இல் என்ன செய்வது?"

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து இருப்பை மத்திய அரசு மடைமாற்றும் செயலில் ஈடுபட்டு வருவதால் மே 1 ஆம் தேதி 18 வயது முதல் 45 வயதுடையவர்களுக்கு எப்படி கொரோனா தடுப்பூசி போடுவது என்றே தெரியவில்லை என காங்கிரஸ் ஆளும் 4 மாநிலங்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளன.

இந்தியா முழுவதும் அனைவருக்கும் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டதால் தற்போது தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இரு டோஸ்களாக போடப்படும் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் பற்றாக்குறையால் முதல் டோஸ் போட்டவர்களுக்கே அடுத்த டோஸ் கிடைக்காத சூழல் நிலவுகிறது.

முதலில் சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கிய நிலையில் தற்போது இரண்டாவது அலை கடுமையாக வீசிவதால் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என அரசு அறிவித்தது.

கொரோனாவின் தாக்கம்

கொரோனாவின் தாக்கம்

கொரோனாவின் தாக்கம் தீவிரமடைந்துள்ள நிலையில் வரும் மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இதனிடையே இரு தடுப்பூசிகளின் விலையும் அதிகமாகவே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி

தடுப்பூசி

இந்த நிலையில் காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கர், ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்கள் மத்திய அரசு மீது ஒரு புகாரை முன்வைத்துள்ளன. எங்கள் மாநிலங்களுக்கான தடுப்பூசி இருப்புகளை மத்திய அரசு மடைமாற்றிக் கொண்டது. இதனால் தற்போதைக்கு தடுப்பூசி இல்லாத நிலை உள்ளது.

தடுப்பு மருந்துகள்

தடுப்பு மருந்துகள்

வரும் மே 1 ஆம் தேதி முதல் 18 வயது முதல் 45 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி போட தயார்நிலையில் இருக்க உற்பத்தியாளர்களிடம் தெரிவித்தால் அவர்களால் அனுப்ப முடியாத நிலையில் இருப்பதாக தெரிவிக்கிறார்கள். மே 15 வரை தடுப்பு மருந்துகளை கொடுக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

தடுப்பூசி

தடுப்பூசி

அவ்வாறிக்கையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு எப்படி நாங்கள் தடுப்பூசி போடுவது? அனைவருக்கும் தடுப்பூசி போடும் திறன் எங்களிடம் இருக்கு. ஆனால் தடுப்பூசி இல்லை. எங்கள் மாநிலங்களுக்கு தேவைக்கேற்ப தடுப்பூசிகளை அனுப்ப வேண்டும். தடுப்பூசிக்கான செலவை மத்திய அரசே ஏற்க வேண்டும்.

ரெம்டிசிவிர் மருந்து

ரெம்டிசிவிர் மருந்து

இந்த தடுப்பூசிகளுக்கு நாங்கள் எப்படி நிதி ஒதுக்க முடியும்? காங்கிரஸ் ஆளும் மாநிலங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு நடத்துகிறது. ஒரே நாடு ஒரோ வரி, ஒரே அரசியலமைப்பு என பேசி வரும் மத்திய அரசு ஏன் அந்த தடுப்பு மருந்தை இலவசமாக வழங்கக் கூடாது? வங்கதேசத்திலிருந்து ரெம்டிசிவிர் மருந்தை வாங்க மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+