டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

லோக்சபாவில் மின்சார சட்ட திருத்த மசோதா தாக்கல்! திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!

Google Oneindia Tamil News

டெல்லி: நாடாளுமன்ற லோக்சபாவில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி மின்சார சட்ட திருத்த மசோதாவை மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங் இன்று தாக்கல் செய்தார். இம்மசோதா நிறைவேறினால் இலவச மின்சாரம் பெறும் பல லட்சக்கணக்கான தமிழக விவசாயிகள் பாதிக்கப்படுவர் என திமுக எம்.பி. டி.ஆர்.பாலு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் லோக்சபாவில் இருந்து வெளிநடப்பும் செய்தனர்.

Recommended Video

    100 Unit இலவச மின்சாரத்திற்கு ஆபத்து?... மின்சாரத்துறையில் தனியார்... *Politics | Oneindia Tamil

    மத்திய அரசின் மின்சார சட்ட திருத்த மசோதா என்பது, மின் விநியோகத்தை தனியாருக்கு தாரை வார்ப்பது, மின்சார ஒழுங்குமுறை ஆணையங்களுக்கு அதிக அதிகாரம், அதிகபட்ச மின் கட்டணம் நிர்ணயம் என பல அம்சங்களைக் கொண்டது. இந்த மசோதாவின் மிக முக்கிய அம்சமாக, மானியங்களைக் கணக்கில் கொள்ளாமல் மின் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பதும் உள்ளது.

    தமிழில் நிர்மலா சீதாராமன் வைத்த “புகார்”.. கொந்தளித்த திமுகவினர்! தமிழக சட்டமன்றம்போல் மாறிய லோக்சபாதமிழில் நிர்மலா சீதாராமன் வைத்த “புகார்”.. கொந்தளித்த திமுகவினர்! தமிழக சட்டமன்றம்போல் மாறிய லோக்சபா

    தமிழகம் எதிர்ப்பு ஏன்?

    தமிழகம் எதிர்ப்பு ஏன்?

    மத்திய அரசின் இந்த மசோதாவுக்கு தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தும் வந்தன. இது தொடர்பாக ஏற்கனவே பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விரிவான கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார். அதில், இச்சட்ட திருத்தத்தால் மாநிலத்தின் மின் விநியோக நிறுவனங்கள் பாதிக்கப்படும். இந்த சட்டத் திருத்த மசோதாவானது, மின் விநியோக பிரிவின் உரிமங்களை ரத்து செய்ய வழிவகை செய்வதாக தெரிகிறது.இந்த மசோதா மூலம் வர்த்தக பகுதிகளில் அதிக மின்சாரத்தை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களை, புதிய தனியார் நிறுவனங்கள் தங்கள் பக்கம் இழுத்துக் கொள்ளும் நிலையும் ஏற்படும். இதனால், சமூக சிந்தனையின்றி லாபநோக்கத்தையே குறிக்கோளாக கொண்டு அதற்கேற்ப முறைகளை வகுக்கும் உரிமையை தனியார் நிறுவனங்கள் பெறும். மேலும், மாநிலத்தின் பொதுத்துறை மின்சாரத்தை பெறும் நுகர்வோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், ஊரகப் பகுதிகளுக்கு மட்டுமே மானியம் பெறும் நிலை ஏற்படும்.

    முதல்வர் ஸ்டாலின் கடிதம்

    முதல்வர் ஸ்டாலின் கடிதம்

    மின்சார திருத்தச்சட்டத்தின் 26, 28, 32 ஆகியபிரிவுகளை திருத்துவதன் மூலம், பல்வேறு அதிகாரங்கள் தேசிய மின் தொகுப்பு விநியோக மையத்துக்கே வழங்கப்படுகிறது. இது, மாநில மின் தொடரமைப்புக் கழகத்தின் எஸ்எல்டிசி மையம், மின் விநியோக நிறுவனங்கள் அல்லது மாநில அரசின் மின்சாரம்தொடர்பான செயல்பாடுகளை மறைமுகமாக கட்டுப்படுத்தவும் வழிவகுக்கும். எனவே, மக்களுக்கு மலிவு விலையில் மின்சாரத்தை மாநில அரசுக்குச்சொந்தமான விநியோகஸ்தர்களை கொண்டு வழங்கும் நிலை தொடர அனுமதிக்கும் வகையில், இந்த விவகாரத்தில் நீங்கள் தனிப்பட்ட முறையில் தலையிட்டு, மின்சார திருத்தச் சட்ட மசோதாவை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார். இதேபோல மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியும், பிரதமர் மோடிக்கு இந்த சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடிதம் அனுப்பி இருந்தார்.

    லோக்சபாவில் தாக்கல்

    லோக்சபாவில் தாக்கல்

    இந்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் இன்று லோக்சபாவில் மின்சார சட்ட திருத்த மசோதாவை மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங் தாக்கல் செய்தார். இம்மசோதாவை அறிமுக நிலையிலேயே திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

    திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு

    திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு

    அப்போது பேசிய திமுக எம்.பி. டி.ஆர்.பாலு, இம்மசோதா நிறைவேறினால் தமிழகத்தில் இலவச மின்சாரத்தை நம்பி இருக்கும் பல லட்சம் விவசாயிகள் பாதிக்கப்படுவர் என்றார். இம்மசோதா கூட்டாட்சி தத்துவத்துக்கே எதிரானது என்றது காங்கிரஸ். இதனைத் தொடர்ந்து மின்சார சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்ப வலியுறுத்தியும் திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் லோக்சபாவில் இருந்து வெளிநடப்பு செய்தன. இதன் பின்னர் இம்மசோதா நாடாளுமன்ற நிலைக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    English summary
    The Electricity (Amendment) Bill, 2022 introduced in Lok Sabha by the Union Power minister RK Singh.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X