சீனாவுடன் என்னதான் பஞ்சாயத்து? எல்லையில் என்னதான் நடக்குது? மத்திய அரசு விளக்க வேண்டும்- ராகுல்
டெல்லி: எல்லையில் சீனாவுடன் என்னதான் பிரச்சனை என்பதை மத்திய அரசு வெளிப்படையாக விளக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
லடாக் எல்லையில் சீனாவின் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. இந்தியாவுடனான யுத்தத்துக்கு தயாராகுமாறு சீனா ராணுவத்தினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.

மத்திய அரசும் எல்லையில் படைகளை குவித்து வருகிறது. எல்லை நிலவரம் குறித்து மத்திய அரசு தொடர்ந்து ஆலோசனைகளை நடத்தி வருகிறது. இதனிடையே இந்தியா -சீனா பிரச்சனைக்கு தாம் மத்தியஸ்தம் வகிக்கப் போவதாக அமெரிக்கா அதிபர் டிரம்ப் கூறியதாகவும் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன.
இது தொடர்பாக பிரதமர் மோடியிடம் டிரம்ப் பேசினார் என முதலில் செய்திகள் வெளியாகின. ஆனால் மத்திய அரசு இதனை திட்டவட்டமாக மறுத்தது. இந்நிலையில் எல்லையில் என்னதான் நடக்கிறது என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியிருக்கிறார்.
தமது ட்விட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி, எல்லை நிலவரம் குறித்து மத்திய அரசு அமைதிகாத்து வருகிறது. எல்லையில் என்னதான் நடக்கிறது என்பதை மத்திய அரசு வெளிப்படையாக விவரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் ராகுல் காந்தி.












Click it and Unblock the Notifications