மேகதாது அணை: தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட 4 மாநில முதல்வர்கள் கூட்டத்தை கூட்ட மத்திய அரசு திட்டம்?
டெல்லி: மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட 4 மாநிலங்களின் முதல்வர்கள் கூட்டத்தைக் கூட்ட மத்திய அரசு ஆலோசித்து வருவதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணையை கட்டுவதில் கர்நாடகா அரசு தீவிரமாக உள்ளது. கர்நாடகாவின் இந்த முயற்சிக்கு தமிழகம் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

தமிழக அனைத்து கட்சிக் கூட்டம்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சிக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கர்நாடகாவின் பிடிவாதமான போக்குக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

டெல்லி செல்லும் குழு
மேலும் மேகதாது அணை கட்டும் கர்நாடகாவின் முயற்சிக்கு மத்திய அரசு அனுமதி தரக் கூடாது; தமிழக அனைத்துக் கட்சிக் குழு டெல்லி சென்று மத்திய அரசிடம் இதனை வலியுறுத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

கர்நாடகா பிடிவாதம்
ஆனாலும் மேகதாது அணையை கட்டுவோம் என்று தொடர்ந்து கர்நாடகா கூறி வருகிறது. இந்த நிலையில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக 4 மாநிலங்களின் முதல்வர்கள் கூட்டத்தைக் கூட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Recommended Video

4 மாநில முதல்வர்கள் கூட்டம்?
காவிரி நதிநீர் பிரச்சனையில் தொடர்புடைய தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி மற்றும் கேரளா மாநிலங்களின் முதல்வர்கள் கூட்டத்தை கூட்டுவதற்கு மத்திய ஜல்சக்தி துறை அமைச்சகம் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இதுவரை அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
-
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மதுரையை சேர்ந்தவர்.. கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமாரின் செயலாளராக தமிழர் நியமனம்.. யார் இவர்? -
பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் யார் தெரியுமா? கர்நாடக அமைச்சர்களின் இலாகா விவரம் -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற பெண் செயலாளராக சாந்தி நியமனம்.. யார் இவர்? இவருடைய பவர் என்ன? -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications